WTC Final : அந்த 2 பேரு முக்கியம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் களமிறங்கும் தனது 11 பேர் இந்திய அணியை வெளியிட்ட கவாஸ்கர்

- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்காக 2021 முதல் உலகம் முழுவதிலும் நடைபெற்று வந்த லீக் சுற்றில் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஃபைனலில் கோப்பை வெல்ல பலப்பரீட்சை நடத்த உள்ளன. அப்போட்டியில் களமிறங்கும் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

IND vs AUS

- Advertisement -

அதில் பேட்டிங் துறையில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அஜிங்க்ய ரகானே யாருமே எதிர்பாராத வகையில் 15 மாதங்கள் கழித்து மீண்டும் கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளார். கடந்த 10 வருடங்களாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 36க்கு ஆல் அவுட்டான பின் விராட் கோலிக்கு பதிலாக இந்தியாவை கேப்டனாக அபாரமாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று கொடுத்து அசத்தினார்.

சுனில் கவாஸ்கர் லெவன்:
இருப்பினும் அத்தொடருக்கு பின் சதமடிக்காமல் தவித்ததால் அதிரடியாக கழற்றி விடப்பட்ட அவர் கடந்த ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பி 2023 ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் சரவெடியாக வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடி முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதனால் ஏற்கனவே இந்திய மண்ணில் விட வெளிநாட்டு மண்ணில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஃபார்மின்றி தடுமாறும் சூரியகுமார் ஆகியோருக்கு பதிலாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Ajinkya Rahane WTC Final

அதை வரவேற்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ஐபிஎல் மட்டுமல்லாமல் ரஞ்சி கோப்பையிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதாலயே ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாராட்டியுள்ளார். அத்துடன் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை சாய்த்து கோப்பையை வெல்லும் அளவுக்கு தன்னுடைய தரமான 11 பேர் இந்திய அணியை தேர்வு செய்த அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் அந்த ஒரு மாற்றம் மட்டும் தான் தேவைப்பட்டது. அதாவது இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலான மாற்று வீரர்கள் தேவைப்பட்டது”

- Advertisement -

“அந்த இடத்தில் ஐபிஎல் ஃபார்ம் காரணமாக மட்டும் ரகானே வாய்ப்பு வரவில்லை. மாறாக சமீபத்திய ரஞ்சி கோப்பையில் மும்பைக்காக அவர் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் தற்போதைய கேள்வி என்னவெனில் அவர் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறுவாரா? விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் அல்லது கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் அந்த ஃபைனலில் ரோகித் சர்மா – சுப்மன் கில் ஆகியோர் என்னுடைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள்”

Gavaskar

“3இல் புஜாரா 4இல் விராட் கோலி 5இல் ரகானே 6இல் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் இருப்பார். அதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயதேவ் உனட்கட், முகமத் ஷமி, முகமத் சிராஜ் ஆகியோர் இருப்பார்கள்” என்று கூறினார். அதாவது தம்மை பொறுத்த வரை இந்த ஃபைனலில் விக்கெட் கீப்பராக பரத்துக்கு பதிலாக ராகுலும் 5வது இடத்தில் ரகானேவும் விளையாடுவார்கள் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:WTC Final : ஃபைனலில் ஜெயிக்க ரோஹித்துடன் டெக்னிக் குறையில்லாத அவர் தான் விளையாடனும் – மைக்கேல் வாகன் கோர்க்கை

ஆனால் பொதுவாகவே இங்கிலாந்து மண்ணில் சுழலை விட வேகத்துக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்ற நிலைமையில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 1 ஸ்பின்னர் வைத்து விளையாடினால் தான் வெற்றி காண முடியும். அப்படிப்பட்ட நிலையில் 4வது வேகப்பந்து வீச்சாளராக ஆல் ரவுண்டர் இருப்பது அவசியமாகும். அந்த இடத்தில் ஷார்துல் தாகூரை தேர்வு செய்யாத கவாஸ்கர் கடந்த ஃபைனலில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்த 2 ஸ்பின்னர்கள் தேர்வான அஷ்வின் – ஜடேஜாவை மீண்டும் இந்த அணியில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது ரசிகர்கள் அதிருப்தியடையும் ஒன்றாக இருக்கிறது.

Advertisement