WTC Final : ஃபைனலில் ஜெயிக்க ரோஹித்துடன் டெக்னிக் குறையில்லாத அவர் தான் விளையாடனும் – மைக்கேல் வாகன் கோர்க்கை

Vaughan
- Advertisement -

உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியாவை 2வது இடம் பிடித்த இந்தியா எதிர்கொள்கிறது. சொல்லப்போனால் வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் லீக் சுற்றிலும் விராட் கோலி தலைமையில் சக்கை போடு போட்ட இந்தியா ஃபைனலில் நியூசிலாந்திடம் மண்ணை கவியது. எனவே இம்முறை ரோகித் சர்மா தலைமையில் எப்படியாவது கோப்பையை வெல்ல போராடும் 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Shubman-Gill-and-Rohit

- Advertisement -

பொதுவாகவே இங்கிலாந்தில் ஈரப்பதமான சூழ்நிலை நிலவும் என்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அவர்களை சமாளித்து குறைந்தது 50 – 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தால் தான் இறுதியில் 300 – 400 போன்ற பெரிய ரன்களை எடுத்து வெற்றிக்கு போராட முடியும். அந்த நிலையில் இந்த ஃபைனலில் ரோகித் சர்மாவுடன் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கள் குறை இருக்கு:
அதே போல் ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விக்கெட் கீப்பிங் செய்ய தடுமாறி பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்ட கேஎஸ் பரத் வேகத்துக்கு சாதகமான இங்கிலாந்தில் தடுமாறுவார் என்பதால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என ரவி சாஸ்திரி, கவாஸ்கர் போன்ற ஏராளமான முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் அளவுக்கு சுப்மன் கில்லிடம் டெக்னிக்கல் அளவில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கோப்பையை வெல்ல ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக ராகுல் தான் விளையாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

KL-Rahul-and-GIll

குறிப்பாக வருங்காலத்தைப் பற்றி சிந்திக்க இது ஒன்றும் தொடர் கிடையாது என்று தெரிவிக்கும் அவர் ஒரே ஒரு ஃபைனல் போட்டியில் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்தால் தான் வெற்றி காண முடியும் என்று கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து கால சூழ்நிலைக்கேற்றார் போல் இந்திய அணியில் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரே மாற்றம் என்னவெனில் சும்பன் கில்லை விட நகரும் பந்துகளை கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடுவார். சுப்மன் சிறப்பான இளம் வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் ஒரு போட்டியில் வெல்ல வேண்டும் என்ற சூழ்நிலையில் ஃபைனலில் களமிறங்குகிறீர்கள்”

- Advertisement -

“எனவே வரலாற்றை மறந்து விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்யுங்கள். குறிப்பாக பந்து நேராக வரும் போது சுப்மன் கில் ஆபத்தான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருடைய டெக்னிக்கில் சில குறைபாடுகளை நான் பார்த்துள்ளேன். குறிப்பாக பந்து நகரும் போது அவர் தன்னுடைய கைகளை பந்தை நோக்கி சற்று அதிகமாக எடுக்கிறார். அதனால் அடிக்கடி எட்ஜ் கொடுக்கிறார். எனவே கில்லுக்கு பதிலாக ராகுல் தேர்வு செய்யப்படுவாரா என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் நான் இந்திய அணியின் தேர்வு குழுவில் இல்லை”

Vaughan

 

- Advertisement -

“ஆனால் ஃபைனலுக்கு பின்பாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு அந்த போட்டிக்கான அணியை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் ஃபைனல் எனும் ஒரு போட்டியில் வெல்வதற்கான சிறந்த அணியை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கிய கில் 28, 8 என 2 இன்னிங்சிலும் சுமாராகவே செயல்பட்டார்.

இதையும் படிங்க:IPL 2023 : எப்டியும் நீங்க அடிச்சு மும்பை பிளே ஆஃப் போகாது – பேசாம இந்தியாவுக்காக அதை செய்ங்க, ரோஹித்துக்கு கவாஸ்கர் அட்வைஸ்

மறுபுறம் 2021இல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் 2018இல் இதே லண்டன் ஓவல் மைதானத்தில் சதமடித்து 149 ரன்கள் விளாசிய அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement