திடீரென வந்த அவசர செய்தி.. கமெண்ட்ரியில் இருந்து பாதியில் வெளியேறிய கவாஸ்கர் – என்ன நடந்தது?

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து தங்களது முதல் இன்னிங்சில் 396 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்களை குவித்தார். இங்கிலாந்து அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர், ரேஹன் அகமது ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியை விசாகப்பட்டினம் மைதானத்தில் இருந்து நேரடியாக வர்ணனை செய்து வரும் சுனில் கவாஸ்கர் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதும் பாதியிலேயே வர்ணனை பெட்டியில் இருந்து சோகமாக வெளியேறினார்.

அவரது இந்த வெளியேற்றம் குறித்த காரணம் என்ன? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கு தெளிவான விளக்கம் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி :

- Advertisement -

சுனில் கவாஸ்கரின் மாமியார் புஷ்பா மெஹ்ரோத்ரா இறந்துவிட்டார் என்ற செய்தி அவருக்கு வந்ததாலே வர்ணனை பட்டியலில் இருந்து அவர் அவசர அவசரமாக வெளியேறியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு டாக்கா நகரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அவர் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்கையில் தான் அவரது தாயார் மீனா இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 19 ஃபோர்ஸ் 7 சிக்ஸ்.. தனிஒருவனாக இந்தியாவை காப்பாற்றிய ஜெய்ஸ்வால்.. சச்சின் உட்பட யாருமே செய்யாத மெகா சாதனை

தற்போது தனது மாமியாரின் இறப்பு காரணமாக விசாகப்பட்டினம் நகரில் இருந்து கான்பூருக்கு புறப்பட்டுள்ள சுனில் கவாஸ்கர் அடுத்ததாக ராஜ்கோட் நகரில் நடைபெறயிருக்கும் 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான வர்ணனை குழுவில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement