19 ஃபோர்ஸ் 7 சிக்ஸ்.. தனிஒருவனாக இந்தியாவை காப்பாற்றிய ஜெய்ஸ்வால்.. சச்சின் உட்பட யாருமே செய்யாத மெகா சாதனை

Yashasvi Jaiswal 5
- Advertisement -

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடிய நிலையில் அவருக்கு கைகொடுக்க முயற்சித்த ரஜத் படிடார் 32, அக்சர் படேல் 27, கேஎஸ் பரத் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் முதல் நாளிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 179* ரன்கள் குவித்து இந்தியா 300 தாண்ட உதவினார்.

- Advertisement -

மெகா சாதனை:
அந்த நிலையில் இன்று துவங்கிய 2வது போட்டியில் அவருடன் தொடர்ந்து விளையாடிய அஸ்வின் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறி தொடர்ந்து அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 191 ரன்களில் இருந்த போது ஜாம்பவான் சேவாக் போல சிக்ஸர் மற்றும் பவுண்டரியை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

அந்த வகையில் தொடர்ந்து அசத்திய அவர் 19 பவுண்டரி 7 சிக்ஸருடன் 209 (290) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் விளையாடிய குல்தீப் யாதவ் 8* ரன்கள் எடுத்த போதிலும் பும்ரா 6, முகேஷ் குமார் 0 ரன்களில் அவுட்டானார்கள். அதனால் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் சோயப் பசீர், ரீகன் அகமது தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

மொத்தத்தில் இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் பும்ரா வரை எஞ்சிய இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே 50 ரன்கள் கூட அடிக்கவில்லை. ஆனால் ஒருபுறம் ஜெய்ஸ்வால் மட்டும் தனி ஒருவனாக இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக நின்று 209 ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் ஒரு இன்னிங்ஸில் மற்ற பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் கூட அடிக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: சேவாக் போல சதம், இரட்டை சதத்தை தெறிக்க விட்ட ஜெய்ஸ்வால்.. இங்கிலாந்துக்கு எதிராக மாஸ் சாதனை

இதற்கு முன்பு 92 வருட வரலாற்றைக் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் முதல் கவாஸ்கர் வரை வேறு எந்த இந்திய வீரர்களும் இப்படி ஒரு தனித்துவமான சாதனையை படைத்ததில்லை. மேலும் இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 185 ரன்கள் மட்டும் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் மட்டும் அதே பிட்ச்சில் அதே இங்கிலாந்து பவுலர்களுக்கு எதிராக 22 வயதிலேயே 209 ரன்கள் அடித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisement