சேவாக் போல சதம், இரட்டை சதத்தை தெறிக்க விட்ட ஜெய்ஸ்வால்.. இங்கிலாந்துக்கு எதிராக மாஸ் சாதனை

Yashasvi Jaiswal 5
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்துக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஒருபுறம் இளம் வீரர் ஜெய்ஸ்வால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் எதிர்புறம் கேப்டன் ரோகித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27, அக்சர் படேல் 27, கேஎஸ் பரத் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை ஏற்படுத்தினர். ஆனால் மறுபக்கம் அந்த அழுத்தத்தை உடைக்கும் வகையில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு சவாலாக மாறி முதல் நாளிலேயே சதமடித்து இந்தியா 336/6 ரன்கள் குவிக்க உதவினர்.

- Advertisement -

சேவாக் போல:
அதைத் தொடர்ந்து இன்று துவங்கிய இரண்டாவது நாளில் அவருக்கு உறுதுணையாக இருந்த அஸ்வின் முடிந்தளவுக்கு போராடியும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் எதிர்ப்புறம் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறிய ஜெய்ஸ்வால் 191 ரன்களில் இருந்த போது சோயப் பஷீருக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு அடுத்த பந்திலேயே பண்டரியையும் விளாசி தன்னுடைய முதல் இரட்டை சதத்தை அடித்தார்.

குறிப்பாக முதல் நாளிலேயே 94 ரன்களில் இருந்த போது டாம். ஹார்ட்லிக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு சதமடித்த அவர் தற்போது 191 ரன்களில் இருந்த போது பவுண்டரியை விளாசி இரட்டை சதமடித்துள்ளார். அந்த வகையில் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் போல கொஞ்சமும் தயக்கமும் பயமும் இல்லாமல் சதத்தையும் இரட்டை சதத்தையும் ஒரே போட்டியில் அடித்துள்ள ஜெய்ஸ்வால் இப்போட்டியில் இதுவரை 19 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரு இன்னிங்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 6 சிக்சர்கள் கூட அடித்ததில்லை. அந்த வகையில் இங்கிலாந்துக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து வரும் ஜெயிஸ்வால் இரட்டை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: ஜேக் காலிஸ் கூட 20 மேட்ச்ல திண்டாடுனாரு.. அவருக்கு டைம் கொடுங்க.. இந்திய வீரருக்கு பீட்டர்சன் ஆதரவு

இறுதியில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 19 பவுண்டரி 7 சிக்சருடன் 209 ரன்கள் குவித்து ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார். அவருடைய சிறப்பான ஆட்டத்தால் இந்தியா சற்று முன் வரை 386/8 ரன்கள் குவித்து இந்த போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

Advertisement