ஜேக் காலிஸ் கூட 20 மேட்ச்ல திண்டாடுனாரு.. அவருக்கு டைம் கொடுங்க.. இந்திய வீரருக்கு பீட்டர்சன் ஆதரவு

Kevin Pieterson
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. எனவே 2வது போட்டியில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 336/6 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27, ரஜத் படிடார் 32, அக்சர் படேல் 27, கேஎஸ் பரத் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் மீண்டும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

நேரம் கொடுங்க:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடி வரும் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்து 17 பவுண்டரி 5 சிக்சருடன் 179* ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு உறுதுணையாக களத்தில் அஸ்வின் 5* ரன்களுடன் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயா பஷீர் மற்றும் ரீகன் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். முன்னதாக இத்தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சுமாராக பேட்டிங் செய்வது வருவது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து சமீபத்திய வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய சுப்மன் கில் கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்தார். இருப்பினும் நிதானமாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அவர் கடந்த 18 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் திண்டாடி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக இத்தொடரின் முதல் போட்டியில் 23, 0 ரன்களில் அவுட்டானதால் அணியிலிருந்து நீக்குமாறு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இப்போட்டியிலும் 34 ரன்களில் அவுட்டான அவர் மொத்தம் 22 போட்டிகளில் 1097 ரன்களை 29.65 சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளதால் நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜேக் காலிஸ் கூட முதல் 10 போட்டிகளில் தடுமாறியதாக கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 132 ரன்ஸ்.. குட்டி சச்சின், சஹரன் சதத்தால் நேபாளை வீழ்த்திய இந்தியாவுடன்.. செமி ஃபைனலில் மோதும் அணி இதோ

எனவே கில்லுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று விமர்சகர்களை கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் கேலிஸ் 22 என்ற சராசரியை மட்டுமே கொண்டிருந்தார். ஆனால் இறுதியில் அவர் இந்த விளையாட்டில் விளையாடிய மகத்தான வீரராக உருவெடுத்தார். சுப்மன் கில் மீண்டு வருவதற்கான கண்டறியும் நேரத்தை கொடுங்கள் ப்ளீஸ். அவர் நல்ல வீரர்” என்று கூறியுள்ளார்.

Advertisement