ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கெதிராக 2 இரட்டை சதம் அடிக்க காரணமே கவாஸ்கர் தானாம் – நடந்தது என்ன?

Jaiswal-and-Gavaskar
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும் அடுத்த நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியிருந்தது.

இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் திகழ்ந்தார். அந்த வகையில் 5 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய அவர் 9 இன்னிங்ஸ்களில் இரண்டு இரட்டை சதம் மற்றும் மூன்று அரைசதம் என 712 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிக்க காரணமே சுனில் கவாஸ்கர் கொடுத்த ஆலோசனை தான் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சரி எவ்வகையான கிரிக்கெட்டிலும் சரி பேட்ஸ்மேன்கள் செய்யும் தவறினை சரியாக சுட்டிக்காட்டி விமர்சிக்கும் பழக்கம் கொண்டவர் கவாஸ்கர்.

அந்த வகையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கில் உள்ள ஒரு சில குறைகளை கவனித்திருக்கிறார். அந்த வகையில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்காக அங்கு பயணித்திருந்தபோது முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை கவாஸ்கர் சந்தித்திருக்கிறார். அப்போது ஜெய்ஸ்வாலியிடம் :

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது 50 ரன்கள் கடந்த பின்னர் அவர் மோசமான ஷாட்டுகளை விளையாடி ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி கண்டித்திருக்கிறார். மேலும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு நமது விக்கெட்டை நாமே பரிசாக வழங்க கூடாது அவர்களாகத்தான் போராடி பெற வேண்டும். அதுவரை பொறுமை இழக்காமல் ரன்குவிப்பில் கவனமாக இருக்க வேண்டும். நமது இயல்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக கவனத்துடன் வெளிப்படுத்தினால் நிச்சயம் ரன்கள் வரும் என்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

இதையும் படிங்க : 2024 டி20 உலகக் கோப்பையில் வரும் ஸ்ட்ரிக்ட்டான ரூல்.. ஸ்டாப் க்ளாக் விதிமுறையை அறிவித்த ஐசிசி

அப்படி கவாஸ்கர் கூறிய அறிவுரைகளை கேட்ட ஜெயஸ்வால் தென்னாப்பிரிக்க தொடரில் சரியாக விளையாடவில்லை என்றாலும் இந்திய மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக கவனமாக விளையாடினார். குறிப்பாக சதத்தை கடந்த போதும் அவர் கவனத்தை இழக்காமல் விளையாடியதாலே இரண்டு இரட்டை சதங்கள் மட்டுமின்றி 700 ரன்களுக்கு மேல் அடித்து கவாஸ்கரின் சாதனையையும் நெருங்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement