இங்கிலாந்து தொடர் முடிஞ்சதும்.. அவர் நிரந்தர இடம் பிடிப்பாரு பாருங்க.. இந்திய வீரர் மீது கவாஸ்கர் நம்பிக்கை

Sunil Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா தக்க வைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போன்ற அதிரடியான ஆட்டத்தை பென் ஸ்டோக்ஸ் புதிய கேப்டனாக பொறுப்பேற்றது முதல் விளையாடி வரும் இங்கிலாந்து தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வருகிறது. அதனால் இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்திக் காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளதால் இத்தொடருக்கு உலக அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

- Advertisement -

நிலையான இடம்:
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடர் முடிந்ததும் இந்திய அணியில் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் நிலையான இடத்தை பிடிப்பார் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதே போல ஸ்ரேயாஸ் ஐயரும் 2023 உலகக் கோப்பையில் அசத்தியதை போல இத்தொடரில் அதிரடியாக இங்கிலாந்து பவுலர்களை எதிர்கொள்வார் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் எளிதாக செட்டிலாக கூடியவர். மேலும் அவர் இடது கை பேட்ஸ்மேன். அதை பயன்படுத்தி சிறப்பாக விளையாடி இந்த தொடருக்கு பின் அவர் இந்திய டெஸ்ட் அணியில் தன்னை முழுமையாக நிலை நிறுத்துவார் என்று நம்புகிறேன். அதே போல இந்திய மைதானங்களில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயரும் பேட்டிங் செய்தார்”

- Advertisement -

“எனவே அதே போல இந்த தொடரிலும் அவர் 5வது இடத்தில் அதிரடியாக விளையாடுவார் என்று நம்புகிறேன். குறிப்பாக பிட்ச் எப்படி இருக்கும் என்பதை படித்து அவர் அதிரடியாக விளையாடுவதை பார்ப்பது ஆவலாக இருக்கும். அவர் அதை மீண்டும் செய்வார் என்று நம்புகிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல டி20 கிரிக்கெட்டில் சரவெடியாக விளையாடி இந்தியாவுக்காக அறிமுகமான ஜெய்ஸ்வால் கடந்த 2023 ஜூன் மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுக போட்டியிலே சதமடித்து சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: சும்மா சொல்லல.. நம்ம ஊரில் அவங்க அதை செஞ்சாலும் செய்வாங்க.. இந்திய அணியை எச்சரித்த கவாஸ்கர்

அதனால் சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் துவக்க வீரராக உருவெடுத்துள்ள அவர் கடந்த தென்னாப்பிரிக்க தொடரில் தடுமாறினார். இருப்பினும் தற்போது பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் இங்கிலாந்தை அதிரடியாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவித்து தம்முடைய இடத்தை அவர் நிரந்தரமாக்குவார் என்று நம்பலாம்.

Advertisement