சும்மா சொல்லல.. நம்ம ஊரில் அவங்க அதை செஞ்சாலும் செய்வாங்க.. இந்திய அணியை எச்சரித்த கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2012க்குப்பின் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் இந்தியா எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறது.

அந்த வரிசையில் இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் டி20 கிரிக்கெட் போல விளையாடும் யுக்தியை கடைபிடிக்கும் இங்கிலாந்து தொடர் வெற்றிகளை குவிக்கும் அதிரடி அணியாக மாறியுள்ளது.

- Advertisement -

கவனம் தேவை:
அதனால் இம்முறை பஸ்பால் எனப்படும் தங்களுடைய அதிரடி யுக்தியை பயன்படுத்தி இந்தியாவை தோற்கடிக்க இங்கிலாந்து தயாராகியுள்ளது. ஆனாலும் ரவிச்சந்திரன் அஸ்வின், அச்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்களைக் கொண்ட இந்திய அணியை சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட அதன் சொந்த ஊரில் இங்கிலாந்தால் தோற்கடிக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் முன்பை விட தற்போது இந்தியாவில் உள்ள மைதானங்களின் பவுண்டரி அளவுகள் சிறியதாக மாறியுள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே அதில் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து நம்மை தோற்கடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் அதை சமாளிக்க இந்தியா கவனத்துடன் தயாராக இருக்க வேண்டுமென கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பஸ்பால் இந்தியாவில் வேலை செய்யலாம். ஏனெனில் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் இருக்கும் மைதானங்களின் பவுண்டரி அளவுகள் சிறியதாகியுள்ளது. அதே போல தவறான இடத்தில் பட்டால் கூட பவுண்டரி செல்லும் அளவுக்கு இப்போதுள்ள பேட்டுகள் வலுவாக தயாரிக்கப்படுகின்றன. எனவே இத்தொடரில் இந்திய ஸ்பின்னர்களை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்ய முயற்சிப்பார்கள் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: தெரியாம தப்பு நடந்துருக்கலாம்.. என்ன இருந்தாலும் ரோஹித் சர்மா அதை செஞ்சுருக்கக் கூடாது.. ஏபிடி கருத்து

“குறிப்பாக அவர்கள் நம்முடைய பவுலர்களை மைதானத்திற்கு வெளியே சிக்ஸர்களாக அடிக்க முயற்சிப்பார்கள். அந்த நேரத்தில் அவுட்டாக வாய்ப்பிருக்கிறது என்பதை தெரிந்தும் அவர்கள் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதே சமயம் நம்முடைய ஸ்பின்னர்களும் நிறைய டி20 கிரிக்கெட்டில் விளையாடி தயாராக இருக்கின்றனர். எனவே விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் பவுண்டரி அல்லது சிக்ஸர் கொடுக்கக் கூடாது என்பதில் அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக 2 சிக்ஸர்களை அடித்தால் நம்முடைய ஸ்பின்னர்கள் லைன் மற்றும் லென்த்தை மாற்ற முயற்சிப்பார்கள்” என்று கூறினார்.

Advertisement