இதையே ஐபிஎல் ஃபைனலா இருந்தா கேப்பிங்களா? ரோஹித் சர்மாவுக்கு கவாஸ்கர் பதிலடி – நடந்தது என்ன

Sunil Gavaskar
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா புதிய சாம்பியனாக சரித்திரம் படைத்தது. மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் படுதோல்வி சந்தித்து 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் வெறும் கையுடன் நாடு திரும்பியது. இந்த தோல்விக்கு பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதும் விராட் கோலி, புஜாரா போன்ற நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியதும் முக்கிய காரணமாக அமைந்தது.

TEam India

- Advertisement -

அதை விட ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை இடதுகை பேட்ஸ்மேன்களை அவுட் செய்து உலக சாதனை படைத்து ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை ஆஸ்திரேலியா பேட்டிங் வரிசையில் 5 இடது கை வீரர்கள் இருந்தும் தேர்வு செய்யாமல் கழற்றி விட்ட ரோகித் சர்மாவின் முடிவு தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது. குறிப்பாக இம்முறை இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் சற்று அதிக சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அந்த அஸ்வின் – ஜடேஜா இருவரும் தேர்வு செய்யப்பட வேண்டும் என சச்சின் போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

கவாஸ்கர் பதிலடி:
இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற கடந்த ஃபைனலில் மேகமூட்டத்துடன் கூடிய வானிலையில் அந்த ஆகிய இருவரையும் தேர்வு செய்தது தோல்விக்கு காரணமாக அமைந்ததை கருத்தில் கொண்ட ரோகித் சர்மா தப்பு கணக்கு போட்டார் என்று சொல்லலாம். அதன் காரணமாக அடுத்த ஃபைனலை இங்கிலாந்து மண்ணில் நடத்தாமல் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று ரோகித் சர்மா கேட்டுக்கொண்டார்.

Rohit

அதை விட 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் தோற்கடித்த தங்களுடைய திறமையை இந்த ஒரு போட்டியில் வைத்து மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்த ரோகித் சர்மா 2025ஆம் ஆண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஃபைனலை வைத்து வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக்கில் பல பிரிவுகளின் வெற்றியாளர்கள் ஒரே ஒரு ஃபைனலில் தீர்மானிக்கப்படுவதாக தெரிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் ஒருவேளை 3 போட்டிகள் என்ன 16 போட்டிகளை வைத்தாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு சரியாக தயாராமல் சரியான அணியை தேர்வு செய்யாமல் அனைத்து துறைகளிலும் சொதப்பலாக செயல்பட்டு சந்தித்த தோல்வியின் பழியை பல வருடங்களாக இருந்து வரும் ஃபைனலின் வடிவத்தின் மீது போட வேண்டாம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 3 போட்டிகள் கொண்ட ஃபைனலை கேட்பீர்களா? என்றும் ரோகித் சர்மாவுக்கு பதிலடி கொடுக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Gavaskar-and-Ashwin

“கண்டிப்பாக முடியாது. இந்த வகையில் தான் வெற்றியாளரை பல காலங்களாக தீர்மானித்து வருகிறோம். மேலும் வெற்றியாளரை ஒரே ஒரு போட்டியில் தான் தீர்மானிப்பார்கள் என்பதை தெரிந்து தான் நீங்கள் இந்த தொடரின் முதல் போட்டியிலேயே களமிறங்குகிறீர்கள். எனவே நீங்கள் அதற்காக மனதளவில் தயாராக வேண்டும். குறிப்பாக ஐபிஎல் தொடரை போல இத்தொடருக்கும் நீங்கள் முழுமையாக தயாராக வேண்டும்”

இதையும் படிங்க:புஜாராவை நம்பாதீங்க, ரோஹித்துக்கு பதில் அஸ்வின் தான் சரியான டெஸ்ட் கேப்டன் – முன்னாள் வீரர் அதிரடி

“அதை விட்டு விட்டு 3 போட்டியில் சிறந்தவரை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என சொல்லாதீர்கள். பொதுவாக ஃபைனலில் ஒவ்வொருவருக்கும் சில மோசமான நாட்கள் அமையும். ஆனால் அதை எதிர்கொள்ள நீங்கள் தொடரின் முதல் போட்டியில் முதல் பந்திலேயே எப்படி சமாளிக்கலாம் என தயாராக வேண்டும். அதை விட்டுவிட்டு இந்த கருத்துள்ள கொண்டுள்ள நீங்கள் நாளை 5 போட்டிகள் கொண்ட ஃபைனலை நடத்துங்கள் என்றும் சொல்வீர்கள்” என கூறினார்.

Advertisement