இந்தியாவை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? மொத்த ஆஸ்திரேலியர்களுக்கும் கவாஸ்கர் மாஸ் பதிலடி என்ன

Gavaskar
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விளையாடுகிறது. நாக்பூரில் பிப்ரவரி 9 முதல் துவங்கும் இத்தொடரில் குறைந்தபட்சம் 3 வெற்றிகளை பதிவு செய்து வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா கடந்த 2 தொடர்களில் தங்களது சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக அவமான தோல்வி பரிசளித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து 2004க்குப்பின் கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

Steve Smith Harsha Bhogle

- Advertisement -

தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இந்த 2 அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருப்பதால் இத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே இத்தொடரின் மைதானங்கள் பற்றி கடந்த ஒரு மாதமாகவே இரு நாட்டுக்குமிடையே அனல் பறந்து வருகிறது என்று சொல்லலாம். முதலில் கடந்த 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டிக்கு ஒரு வகையான பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் முதன்மையான போட்டிகளில் சுழலுக்கு சாதகமான பிட்ச் கொடுக்கப்பட்டதாகவும் அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கடந்த மாதமே விமர்சித்தார்.

கவாஸ்கர் பதிலடி:
அந்த நெருப்பில் முன்னாள் வீரர் இயன் ஹீலி இம்முறையும் நியாயமற்ற பிட்ச் இருக்கும் என்பதால் இந்தியாவே 2 – 1 (4) என்ற கணக்கில் வெல்லும் என்று விமர்சித்து எண்ணையை ஊற்றினார். அந்த நிலையில் நாக்பூரில் நடைபெறும் முதல் போட்டிக்கான பிட்ச்சை பார்த்த ஸ்டீவ் ஸ்மித் எங்கள் அணியின் பேட்டிங் வரிசையில் இருக்கும் 6 இடது கை பேட்ஸ்மேன்களை இந்தியா தங்களது இடது கை ஸ்பின்னர்களைக் கொண்டு தாக்குவதற்காக வேண்டுமென்றே இருபுறங்களிலும் வலப்பக்கத்தில் காய்ந்த தன்மையும் இதர பகுதிகளில் தண்ணீர் அடித்து ஈரப்பதமான தன்மையுடன் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டினார்.

ian healy virat kohli

அது தான் சமயம் என்று ஜேசன் கில்லஸ்பி போன்ற முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் ஊடகங்களும் இந்தியாவின் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வசை பாடி வருகின்றன. இந்நிலையில் 1.4 மி.மீ பச்சை புற்களுடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சை உருவாக்கி கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவை 2 நாட்களில் தோற்கடித்த ஆஸ்திரேலியர்கள் இந்தியாவைப் பற்றி பேச தகுதியற்றவர்கள் என ஜாம்பவான் சுனில் காவாஸ்கர் நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த சுற்றுப்பயணத்தில் நாங்கள் கொடுத்த மைதானங்களை பற்றி பேசிய ஆஸ்திரேலியர்கள் மனதளவிலான ஸ்லெட்ஜிங் போரை முன்கூட்டியே துவக்கி விட்டார்கள். ஆனால் சமீபத்தில் 2 நாட்களுக்குள் முடிந்த டெஸ்ட் போட்டியை நடத்திய நாடு இந்தியாவின் பிட்ச்களை பற்றி பேசுவதற்கு உரிமையற்றவர்கள். தென்னாபிரிக்காவுக்கு எதிராக காபாவில் நடைபெற்ற போட்டி 2 நாட்களுக்குள் முடிந்தது. அப்போட்டி 2 நாட்களுக்குள் முடியும் அளவுக்கு பிட்ச் தயாரிக்கப்பட்டிருந்தது. அங்கே பந்துகள் தாறுமாறாக பறந்து பேட்ஸ்மேன்களின் உயிருக்கே ஆபத்தை கொடுத்தன”

gavaskar

“ஆனால் ஒருவேளை இந்தியாவில் பிட்ச் தாறுமாறாக சுழன்றாலும் அது பேட்ஸ்மேன்களின் பெயருக்கு ஆபத்தை ஏற்படுத்துமே தவிர உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. மேலும் காபாவில் 2 நாட்களுக்குள் முடிந்த போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன்களும் தங்களது இதயத்தை வாயில் வைத்திருந்ததை காட்டியது. ஆனால் அது பவுலர்களுக்கான வாய்ப்பு என்று ஆஸ்திரேலியா ஊடகங்கள் மழுப்பின. அப்படிப்பட்ட நிலையில் இந்திய துணை கண்டத்தில் மட்டும் முதல் நாளில் பந்து சுழன்றால் ஏன் பதறுகிறீர்கள்”

- Advertisement -

“உண்மையாகவே தரமான சுழல் பந்து வீச்சுக்கு எதிராகத் தான் நல்ல புட் ஒர்க், க்ரீஸ் பயன்படுத்துவது போன்ற பேட்ஸ்மேன்களின் தரம் சோதிக்கப்படும். மேலும் அங்கே பவுலர்களும் மனதளவில் போட்டி போடுவார்கள். அதன் காரணமாகவே ஆசிய துணைக்கண்டத்திலிருந்து வரலாற்றில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் உருவெடுத்துள்ளார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவை தட்டி கேட்க யாருமே இல்லையா? ஐசிசி நடவடிக்கை எடுக்கணும் – 2 முன்னாள் ஆஸி வீரர்கள் கொந்தளிப்பு

முன்னதாக ஆஸ்திரேலியாவில் முதல் நாளிலேயே வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்த போது நாங்கள் எந்த குற்றமும் சொல்லாமல் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் உங்களை சொந்த மண்ணில் தோற்கடித்தோம் என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் அதேபோல முடிந்தால் குறை சொல்லாமல் சுழல் பந்து வீச்சை எதிர்கொண்டு இந்தியாவில் வெற்றி காண முயற்சிகள் என்றும் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement