இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 தொடரில் ஏன் அனுமதிக்கனும் – கில்கிறிஸ்ட்டுக்கு காரணத்துடன் கவாஸ்கர் பதிலடி

- Advertisement -

கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் யாருமே எதிர்பாராத பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்டு உலகின் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று எதிர்பாராத திரில்லர் முடிவுகளை கொடுப்பதுடன் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் வருமானத்தையும் கொட்டிக் கொடுக்கிறது. அதனால் உலக கோப்பைகளையும் அதை நடத்தும் ஐசிசியையும் தரத்திலும் பணத்திலும் மிஞ்சியுள்ள ஐபிஎல் மற்றும் பிசிசிஐ இன்று உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது. இதன் வளர்ச்சியை பார்த்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு வாரியங்கள் தங்களது நாடுகளில் பிரத்தியேக டி20 தொடரை நடத்தினாலும் அவற்றால் ஐபிஎல் உச்சத்தை எட்ட முடியவில்லை.

IPL 2022 (2)

- Advertisement -

ஐபிஎல் போலவே அதில் அணிகளை வைத்துள்ள நிர்வாகங்கள் மேலும் பணக்காரர்களாகி வெஸ்ட் இண்டீஸ், துபாய், தென்னாபிரிக்கா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் தங்களது கிளைகளை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்க டி20 தொடர்கள் வரும் 2023 ஜனவரியில் நடைபெற உள்ளது. அதில் ஐபிஎல் தொடரை போலவே நிறைய வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க வைப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கில்கிறிஸ்ட் அதிருப்தி:
ஆனால் அதே ஜனவரியில் கடந்த பல வருடங்களாக தங்களது நாட்டில் நடைபெறும் பிக்பேஷ் தொடரில் பங்கேற்காமல் ஐபிஎல் கிளை அணிகளுக்காக துபாய் டி20 தொடரில் விளையாட டேவிட் வார்னர் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதை கடுமையாக எதிர்த்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் ஐபிஎல் என்பது உலக கிரிக்கெட்டை அதிகாரம் செய்யும் அமைப்பாக மாறுவது சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஆபத்தானது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

Gilchrist

அதுபோக ஐபிஎல் அணிகளில் வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க சிவப்பு கம்பளம் விரிக்கும் பிசிசிஐ வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இந்திய வீரர்களை தங்களது டி20 தொடர்களில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் அழைப்பது கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்துவதற்காக அல்ல அவர்களின் ஸ்பான்சர்ஷிப் பணத்தை உயர்த்துவதற்காக என்று கில்கிறிஸ்ட்டுக்கு இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கரின் பதிலடி:
மேலும் தங்களது தேசிய கிரிக்கெட்டின் மீது அக்கறை காட்டும் வெளிநாட்டவர்களை போல் இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 தொடர்களில் அனுமதித்தால் பணிச்சுமை அதிகமாகிவிடும் என்பதை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக இந்திய வீரர்களை பிசிசிஐ அனுமதிக்காமல் இருப்பது சரியான முடிவுதான் என்று தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர் இது பற்றி எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

Gavaskar

“பிக்பேஷ் அல்லது ஹண்ட்ரட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்று சில வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தங்களது லீக் தொடர்களின் ஸ்பான்சர்ஷிப்பை அதிகரிக்க விரும்புவதே அதற்கு காரணமாகும். அவர்கள் அவர்களுடைய கிரிக்கெட்டின் மீது அக்கறை காட்டுவது முற்றுலும் புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற அக்கறையுடன் இந்திய வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடாமல் தடுத்து நிறுத்துவதை “பழைய சர்வாதிகாரிகளால்” ஏற்றுக்கொள்ள முடியவில்லை”

- Advertisement -

“மேலும் அந்த வெளிநாட்டவர்கள் இந்திய வீரர்களை வெளிநாட்டு தொடர்களில் அனுமதிக்க வேண்டும் என்பதை பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆனால் கடந்த அரை டஜன் வருடங்களில் அடையாளம் காணப்பட்ட சிறப்பான பயிற்சிகளை கொடுக்கக்கூடிய இந்திய பயிற்சிகளை வெளிநாட்டு டி20 தொடரில் வேலை செய்ய விரும்புவதில்லை. ஐபிஎல், சிறிது காலத்திற்கு ஆஸ்திரேலிய லீக் என்றழைக்கப்படும் ஆபத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர்களும் மற்றும் துணை பயிற்சியாளர்களும் ஆதிக்கம் செலுத்தினர். கிரிக்கெட்டின் பழைய சர்வாதிகாரிகளுக்கு இது ஒருபோதும் இருவழி தெருவல்ல” என்ற காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : இதுவே என்னோட கடைசி ஆபரேஷனாக இருக்கனும். ஹாஸ்பிடலில் இருந்த படி – உருக்கமாக பேசிய சோயிப் அக்தர்

அதாவது இந்திய வீரர்களை விரும்பும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டவர்கள் இந்திய பயிற்சியாளர்கள் மற்றும் துணை பயிற்சியாளர்களை ஏன் விரும்புவதில்லை என்று சுனில் கவாஸ்கர் என்று பதிலடி கொடுத்துள்ளார். ஆனால் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் துணை பயிற்சியாளர்களும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று தெரிவிக்கும் அவர் கிரிக்கெட்டில் எப்போதுமே அவர்கள் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாகவும் அதற்கு ஐபிஎல் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement