இதுவே என்னோட கடைசி ஆபரேஷனாக இருக்கனும். ஹாஸ்பிடலில் இருந்த படி – உருக்கமாக பேசிய சோயிப் அக்தர்

Shoaib-Akhtar
- Advertisement -

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பாகிஸ்தான அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகள், 163 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவர் இன்றுவரை உலகின் அதிவேக பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் திகழ்கிறார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தொடர்ச்சியாக கிரிக்கெட் குறித்த பணிகளையே மேற்கொண்டுவரும் சோயிப் அக்தர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் நகரில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு உருக்கமான வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக தான் வலியை அனுபவித்து வருவதாகவும் அதன் காரணமாகவே அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அவர் அதில் உருக்கமாக பேசியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் அக்தர் கூறியதாவது :

நான் பாகிஸ்தான் அணிக்காக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை இன்னும் அதிகமாக விளையாடியிருக்க முடியும். ஆனால் அப்படி விளையாடி இருந்தால் நிச்சயம் இந்நேரம் நான் வீல் சேரில் தான் வந்திருக்க முடியும். அந்த அளவிற்கு என்னுடைய காயம் எனது கிரிக்கெட் வாழ்வில் என்னை பாதித்தது.

- Advertisement -

தொடர்ச்சியாக இருந்து வந்த முழங்கால் வலி காரணமாக நான் தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். இதுவே என்னுடைய கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன் என உருக்கமான வீடியோ ஒன்றினை சோயிப் பக்தர் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2022 : கே.எல் ராகுலுக்கு ஒரு வார கெடு விதித்த பி.சி.சி.ஐ – இப்படி ஒரு பிரச்சனையா?

அவரது இந்த வீடியோவினை கண்ட ரசிகர்கள் அவர் விரைவில் மீண்டும் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement