ஆசிய கோப்பை 2022 : கே.எல் ராகுலுக்கு ஒரு வார கெடு விதித்த பி.சி.சி.ஐ – இப்படி ஒரு பிரச்சனையா?

KL Rahul
- Advertisement -

இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதில் காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த இந்திய அணியின் இளம் வீரரான கே.எல் ராகுல் மீண்டும் துணை கேப்டன் பதவியோடு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை அடுத்து தென்னாப்பிரிக்க தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்ட வேளையில் கே.எல் ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

KL-Rahul

- Advertisement -

அதன் பிறகு ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் அதற்கு அடுத்து வந்த அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என அடுத்தடுத்து பல்வேறு தொடர்களை தவற விட்டார். இந்நிலையில் மீண்டும் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இணைந்துள்ள அவர் பல மாதங்கள் கழித்து இந்திய அணிக்காக விளையாட உள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் இவர் மீண்டும் எவ்வாறு விளையாடப் போகிறார்? என்பது குறித்தும் அவரது பேட்டிங் ஃபார்ம் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்த கேள்வியும் அதிகம் உள்ளது.

Rahul

இவ்வேளையில் ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பதற்கு முன்பாக தற்போது கே எல் ராகுலுக்கு ஒரு வார கெடு ஒன்றினை பிசிசிஐ விதித்துள்ளது.

- Advertisement -

அதன்படி காயத்திலிருந்து கே.எல் ராகுல் மீண்டு வந்து இருந்தாலும் அவரது பிட்னஸை தேசிய கிரிக்கெட் அகாடமியில் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி தற்போது பெங்களூரில் இருக்கும் கே.எல் ராகுல் இன்னும் ஒரு வாரத்திற்குள் தனது உடல் தகுதியை நிரூபித்தால் மட்டுமே அணியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அப்போ டி20 உலகக்கோப்பையுடன் விராட் கோலியும் விலக போறாரா – கலக்கமடையும் இந்திய ரசிகர்கள், காரணம் இதோ

அப்படி ஒருவேளை அவர் அந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பேக்கப் வீரராக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement