அப்போ டி20 உலகக்கோப்பையுடன் விராட் கோலியும் விலக போறாரா – கலக்கமடையும் இந்திய ரசிகர்கள், காரணம் இதோ

kohli
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வகையான சர்வதேச போட்டிகளுடன் ஐபிஎல் போன்ற பிரீமியர் லீக் தொடர்களும் நடைபெறுவதால் அதில் தொடர்ச்சியாக பங்கேற்கும் உலகத்தரமான வீரர்கள் ஒரு கட்டத்தில் பணிச்சுமைக்கு உள்ளாகின்றனர். அதனால் சமீப காலங்களில் ஒருசில நட்சத்திர வீரர்கள் குறைவான வயதிலேயே ஏதேனும் ஒருவகையான கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு முடிவை அறிவிக்கிறார்கள். அந்த வரிசையில் நியூசிலாந்தைச் சேர்ந்த நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் இணைந்துள்ளனர். ஆம் கடந்த 2011 முதல் நியூசிலாந்துக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் தனது அபார திறமையால் தொடர்ச்சியாக விளையாடி வரும் அவர் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களிலும் விளையாடி வருகிறார்.

தற்போது 33 வயதாகும் அவர் சமீப காலங்களில் அதிகப்படியான பணிச்சுமையை உணர்ந்ததுடன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்று கருதியதால் நியூசிலாந்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக எடுத்துள்ள அவரின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் அறிவித்துள்ளது. இதனால் இதுநாள் வரை நியூசிலாந்து பங்கேற்ற அத்தனை போட்டிகளில் பங்கேற்ற ட்ரெண்ட் போல்ட்டை இனிமேல் நாம் அனைத்து போட்டிகளிலும் பார்க்க முடியாது. அவர் விரும்பும் முக்கிய போட்டிகளில் மட்டும் விளையாடுவார்.

- Advertisement -

வரிசையான அறிவிப்புகள்:
சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 11 வருடங்களாக தனது மிகச்சிறந்த செயல்பாடுகளால் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் மிரட்டிய அவர் 548 விக்கெட்டுகள் எடுத்த நம்பர் ஒன் பந்துவீச்சாளராக போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் 33 வயதிலேயே இந்த முடிவு எடுத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மேலும் இதே பணிச்சுமை மற்றும் ஃபார்ம் காரணமாக இங்கிலாந்துக்கு 2019 உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இயன் மோர்கன் 35 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதேபோல் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக போற்றப்படும் பென் ஸ்டோக்ஸ் 31 வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்தார். மேலும் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் நட்சத்திர விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றார். இதுபோக வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோரும் ஒருவகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதேபோல் விரைவில் நிறைய வீரர்கள் முடிவெடுப்பார்கள் என்று ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கலக்கத்தில் ரசிகர்கள்:
இப்படி வரிசையாக நட்சத்திர வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வு பெறுவதற்கு ஐபிஎல் போன்ற உலகம் முழுவதிலும் நடைபெறும் டி20 தொடர்கள் முக்கிய காரணமாகிறது. வாழ்க்கையை வாழ்வதற்காக பணம் தேவைப்படுவதால் அதில் விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் வீரர்கள் பணிச்சுமையை நிர்வகிக்க நாட்டுக்காக ஏதேனும் ஒருவகையான கிரிக்கெட்டில் விளையாடினால் போதும் என்று நினைக்கிறார்கள். இதனால் சர்வதேசப் போட்டிகளின் அழிவு ஆரம்பமாகி விட்டதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ரசிகர்கள் இந்த பட்டியலில் அடுத்ததாக இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி இணைய போவதாகவும் கலக்கமடைந்துள்ளனர்.

ஏனெனில் 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2017 முதல் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். அந்த அனைத்து துறைகளிலும் அசத்தலாக செயல்பட்டு வந்த அவரை அதை செய்ததால் ஏற்பட்ட பணிச்சுமை கடந்த 2019க்குப்பின் சதத்தை அடிக்க முடியாமல் மெகா வீழ்ச்சியை சந்திக்க வைத்துள்ளது.

- Advertisement -

அதிலிருந்து விடுபடுவதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்புகளை ராஜினாமா செய்து சுதந்திரப் பறவையாக விளையாடத் தொடங்கி 6 மாதங்களை கடந்த போதிலும் அவரால் அந்த பழைய பார்மை மீட்டெடுக்க முடியவில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் அவர் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உட்பட நிறைய தொடர்களில் ஓய்வெடுத்து வருகிறார்.

உலககோப்பைக்குப்பின் ஓய்வு:
மேலும் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்களை அடிக்காமல் அணியில் விளையாடுவீகள் என்ற கபில் தேவ் போன்ற நிறைய முன்னாள் வீரர்களின் விமர்சனத்தை வாங்கிக் கட்டிக் கொண்டு வரும் அவர் அடுத்ததாக ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளார்.

ஆனால் தற்போது 33 வயதை கடந்துள்ள அவர் எஞ்சிய கேரியரில் சிறப்பாக செயல்படுவதற்கு வரும் 20 உலகக் கோப்பை அல்லது 2023 பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்குப் பின் ஏதேனும் ஒரு வகையான கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பென் ஸ்டோக்ஸ், குயின்டன் டி காக், டிரென்ட் போல்ட் வரிசையில் விராட் கோலியும் இணையப்போவதாக ரசிகர்கள் இப்போதே கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement