தோனி, கோலியை விட ரோஹித் டாப் கேப்டன்னு சொல்ல இது போதாதா? கவாஸ்கர் பாராட்டு

Sunil Gavaskar 9
- Advertisement -

ரசிகர்களுக்கு உச்சகட்ட விருந்து படைத்து நிறைவு பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா எடுத்த அதே 212 ரன்களை ஆப்கானிஸ்தானும் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரிலும் இரு அணிகள் தலா 16 ரன்கள் எடுத்தன.

அதன் காரணமாக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் ஒரு வழியாக இந்தியா 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. முன்னதாக அப்போட்டியில் 22/4 என தடுமாறிய போது ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்து 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ரோகித் சர்மா 129* ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

கவாஸ்கர் பாராட்டு:
அத்துடன் முதல் சூப்பர் ஓவரில் 13 ரன்கள் அடித்த அவர் 2வது சூப்பர் ஓவரில் 11 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். சொல்லப்போனால் 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடும் அவர் முதலிரண்டு போட்டியில் டக் அவுட்டான நிலையில் 3வது போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று தன்னுடைய தரத்தை காண்பித்தார்.

அத்துடன் இந்த வெற்றியையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையும் அவர் சமன் செய்துள்ளார். இந்நிலையில் 71 போட்டிகளில் 41 வெற்றிகளை 56.94% சராசரியில் பதிவு செய்துள்ள தோனியை விட 54 டி20 போட்டிகளில் 41 வெற்றிகளை 75.92% என்ற சராசரியில் பெற்றுள்ள ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் தான் உங்களுடைய கேப்டன்ஷிப் நுணுக்கங்கள் சோதிக்கப்படும். ஆனால் அங்கே தோனி மற்றும் விராட் கோலியை விட அதிக வெற்றி சராசரியை கொண்டிருப்பது ரோகித் சர்மா சிறந்த கேப்டன் என்பதை சொல்கிறது. பொதுவாக நீங்கள் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைப்பீர்கள்”

இதையும் படிங்க: இந்த முறையும் அவர் என்னை அவுட்டாக்குவார்.. டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே – பயந்த இங்கிலாந்து வீரர்

“ஆனால் இந்த போட்டியில் 22/4 என இந்தியா தடுமாறிய போது ரோஹித் மற்றும் ரிங்கு அதற்கு மறுப்பு தெரிவித்து அறிவுடன் விளையாடினார்கள். குறிப்பாக ஆரம்பத்தில் நேரம் எடுத்து பின்னர் ரன்களை அடிக்கலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்பட்டனர். ஒருவேளை அவர்களும் அவுட்டாகியிருந்தால் நாம் 70 – 90க்கு ஆல் அவுட்டாகியிருப்போம். இருப்பினும் ஆரம்பத்தில் நேரம் எடுத்து விளையாடிய அவர்கள் கடைசி 5 ஓவரில் 100 ரன்கள் அடித்தனர். அது சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்பட்டால் வெற்றி காணலாம் என்பதை காண்பித்தது” என்று கூறினார்.

Advertisement