இந்த முறையும் அவர் என்னை அவுட்டாக்குவார்.. டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே – பயந்த இங்கிலாந்து வீரர்

Ben-Duckett
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வரும் ஜனவரி 25-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த இந்திய தொடருக்காக தற்போது இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி போட்டியிலும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் வட்டத்திற்குள் நடைபெற இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள வேளையில் தற்போது இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான பென் டக்கெட் எதிர்வரும் இந்திய டெஸ்ட் தொடரில் தான் சந்திக்க உள்ள சவால் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் உலகின் நம்பர் 1 வீரரான அஸ்வின் நிச்சயம் இந்த தொடரிலும் ஒரு சில முறை என்னை ஆட்டமிழக்க வைப்பார். அவருக்கு எதிராக நான் ஏற்கனவே விளையாடிய போது பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். அதிலும் இம்முறை இந்தியாவில் டெஸ்ட் தொடரானது நடைபெற இருப்பதால் நிச்சயம் அவருக்கு எதிரான என்னுடைய ஆட்டம் சற்று சவாலாகவே இருக்கும்.

- Advertisement -

அஸ்வின் தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஆப் ஸ்பின்னர். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்பது அனைவரும் அறிந்ததே. இம்முறையும் அவருக்கு எதிராக நான் ஜாக்கிரதையாக விளையாட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவும், சி.எஸ்.கே வீரரான அவரும் சேர்ந்து விளையாடுனா மாஸா இருக்கும் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீச அவரைப் போன்ற வீரர் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். அவருக்கு எதிரான இந்த தொடரின் சவால் என்பது மிகவும் கடினமான ஒன்று என பென் டக்கெட் வெளிப்படையாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement