சூரியகுமார் யாதவும், சி.எஸ்.கே வீரரான அவரும் சேர்ந்து விளையாடுனா மாஸா இருக்கும் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

Ashwin
- Advertisement -

இந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க இருப்பதினால் இந்த டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி தங்களது கடைசி டி20 தொடரான ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பை தொடருக்காக தயாராகி வரும் வேளையில் எந்தெந்த வீரர்களுக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும்? என்ற கேள்வியும் அதிக அளவில் இருந்து வருகிறது.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இடம்பெறப்போகும் வீரர்? குறித்தும் பல்வேறு கருத்துக்கள் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அணியில் காயம் காரணமாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வரும் ஹார்திக் பாண்டியாவிற்கு பதிலாக இடம் பிடித்த ஷிவம் துபே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமின்றி இரண்டு அரை சதங்கள் அடித்து தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார். இதன் காரணமாக நிச்சயம் அவர் டி20 உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற ஆரோக்கியமான தலைவலி தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பையில் ஷிவம் துபேவின் வாய்ப்பு குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : நமது அணியில் ஏற்கனவே டி20 ஸ்பெசலிஸ்ட்டான சூரியகுமார் யாதவ் இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்களை அனைத்து திசைகளிலும் அடிக்கும் வலிமை கொண்ட அவர் ஒருபுறம் வேகப்பந்து வீச்சாளர்களை அற்புதமாக கையாள்வார்.

இதையும் படிங்க : 92 வருட இந்திய கிரிக்கெட்டில் யாருமே செய்யாத தனித்துவ சாதனை படைத்த ரோஹித் சர்மா

அதேவேளையில் மிடில் ஓவர்களில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை எதிரணி கொண்டுவரும் பட்சத்தில் மறுமுனையில் ஷிவம் துபே இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நல்ல உயரமாக நல்ல ரீச் கொண்ட அவர் ஸ்பின்னர்களை வலிமையாக அடிக்கக்கூடிய வீரர். இப்படி சூரியகுமார் யாதவ் ஒருபுறமும் ஷிவம் துபே மறுபுறமும் இருந்தால் நிச்சயம் அது இந்திய அணிக்கு சிறப்பாக இருக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement