92 வருட இந்திய கிரிக்கெட்டில் யாருமே செய்யாத தனித்துவ சாதனை படைத்த ரோஹித் சர்மா

Rohit Sharma 55
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. அந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியா ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது. அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தானும் கடுமையாக போராடி 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சரியாக தலா 16 ரன்கள் எடுத்ததால் மீண்டும் சமனில் முடிந்தது.

- Advertisement -

ரோஹித்தின் சாதனை:
அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட 2வது சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலேயே 22/4 என தடுமாறியது. அப்போது ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்து ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் விளையாடிய ரோகித் சர்மா 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கினார்.

அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த போது 129* ரன்கள் குவித்த அவர் நல்ல ஃபார்மில் இருந்ததால் முதல் சூப்பர் ஓவரிலும் களமிறங்கி 13* ரன்கள் குவித்தார். ஆனால் சூப்பர் ஓவர் சமனில் முடிந்ததால் நடைபெற்ற 2வது சூப்பர் ஓவரிலும் பேட்டிங் செய்த அவர் மீண்டும் 11* ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

அதாவது அந்தப் போட்டியில் சாதாரண இன்னிங்ஸில் 1 முறை மற்றும் சூப்பர் ஓவரில் 2 முறை என மொத்தம் 3 முறை ரோகித் சர்மா பேட்டிங் செய்தார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 3 முறை பேட்டிங் செய்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஏற்கனவே 2 டக் அவுட்.. இதுல நீங்க வேறையா.. நேரலையில் அம்பயரை கலாய்த்த ரோஹித் சர்மா

இதற்கு முன் 1932 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்திய அணிக்காக 92 வருடங்களில் ஒரே போட்டியில் வேறு எந்த இந்திய வீரர்களும் இப்படி 3 முறை பேட்டிங் செய்ததில்லை. அதிகபட்சமாக நிறைய வீரர்கள் காயமடைந்த காரணத்தால் மீண்டும் விளையாடியுள்ளார்களே தவிர ஒரே போட்டியில் 3 முறை பேட்டிங் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement