ஏற்கனவே 2 டக் அவுட்.. இதுல நீங்க வேறையா.. நேரலையில் அம்பயரை கலாய்த்த ரோஹித் சர்மா

Rohit Sharma Umpire
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அந்தத் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டி ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. ஏனெனில் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது.

அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தானும் 20 ஓவரில் சரியாக 212 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடித்தது. அதற்காக நடத்தப்பட்ட முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சரியாக 16 ரன்கள் எடுத்ததால் அதுவும் டையில் முடிந்தது. அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தொலியை சந்தித்தது.

- Advertisement -

கலாய்த்த ரோஹித்:
அந்த வகையில் ரசிகர்களுக்கு உச்சகட்ட விருந்து படைத்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு பரித் அகமது வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் ரோகித் சர்மா லெக் சைட் திசையில் பவுண்டரி அடித்தார். ஆனால் அதை சரியாக கவனிக்க தவறிய அம்பயர் பந்து ரோகித் சர்மாவின் உடலில் பட்டதாக கருதி பவுண்டரி கொடுக்காமல் லெக் பைஸ் கொடுத்தார்.

அதனால் ஏமாற்றமடைந்த ரோகித் சர்மா அம்பயர் வீரேந்திர சர்மாவிடம் பேசியது பின்வருமாறு. “அரே வீரு. முதல் பந்து என்னுடைய உடலில் பட்டதாக நீங்கள் லெக் பைஸ் கொடுத்தீர்களா? ஆனால் அது என்னுடைய பேட்டில் தெளிவாகப் பட்டது. ஏற்கனவே நான் இந்த தொடரில் இரண்டு 0 எடுத்துள்ளேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அதாவது இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டான ரோஹித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான ஆசிய வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார்.

- Advertisement -

குறிப்பாக 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய அவர் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து டக் அவுட்டானதால் ஏராளமான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் எழுந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் “ஏற்கனவே 2 முறை இத்தொடரில் டக் அவுட்டாகியுள்ளேன் இதில் நீங்கள் வேறு முதல் ரன்னை கொடுக்காமல் லெக் பைஸ் கொடுத்தால் எப்படி” என அம்பயரை ஜாலியாக ரோஹித் சர்மா கலாய்த்தது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

இதையும் படிங்க: நீங்க நெனைக்குறது ரொம்ப தப்பு.. உங்களால தொடர்ந்து அப்படி ஆட முடியாது.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – ஏ.பி.டி அட்வைஸ்

இருப்பினும் அதன் பின் 22/4 என தடுமாறிய இந்தியாவை ரிங்கு சிங்குடன் சேர்ந்து 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ரோகித் சர்மா 129* ரன்கள் விளாசினார். அத்துடன் முதல் சூப்பர் ஓவரில் 13* ரன்கள் அடித்த அவர் 2வது சூப்பர் ஓவரிலும் 11* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்று அபார கம்பேக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement