நீங்க நெனைக்குறது ரொம்ப தப்பு.. உங்களால தொடர்ந்து அப்படி ஆட முடியாது.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – ஏ.பி.டி அட்வைஸ்

ABD
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று விளையாடி வந்த வேளையில் டெஸ்ட் போட்டிகளில் சற்று தடுமாற்றத்தை சந்தித்த ரகானேவிற்கு மாற்றுவீரராக தற்போது டெஸ்ட் அணியிலும் விளையாடி வருகிறார். அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 707-ரன்களை எடுத்துள்ளார்.

ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு விக்கெட்டுகளை இழப்பதாக அவர் மீது ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதோடு ஷார்ட் பிட்ச் பந்துகளில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வரும் அவரது வீக்னஸ்ஸை புரிந்து கொண்ட அனைத்து பவுலர்களும் அவருக்கு எதிராக தொடர்ந்து அதே யுக்தியை பயன்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவரை ரஞ்சி போட்டியில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது.

அந்த வகையில் தற்போது ரஞ்சி போட்டியில் விளையாடி முடித்துவிட்டு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக காத்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி நான் தொடர்ந்து அட்டாக்கிங் முறையில் தான் விளையாடப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி.டிவில்லியர்ஸ் ஷ்ரேயாஸ் ஐயருக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து தொடரில் ஷ்ரேயாஸ் அட்டாக்கிங் முறையில் தான் விளையாடப் போவதாக கூறியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இதையும் படிங்க : வெறும் 26 ரன்ஸ்.. அசால்ட்டாக டீல் செய்த ஆஸ்திரேலியா.. 27 வருடமாக தொடரும் வெ.இ சோகம்

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரங்களிலும் அட்டாக் செய்து ரன்களை சேர்க்க முடியாது, டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகே நமது உடல் வலிமை, மனவலிமை மற்றும் சூழல் ஆகிய அனைத்தையும் சோதிப்பது தான். டெஸ்ட் போட்டிகளில் ஒருநாள் முழுவதும் நின்று ரன்களை சேர்க்க வேண்டும் என்றால் பல்வேறு விடயங்கள் சவாலாக இருக்கும். அவற்றையெல்லாம் அனுபவத்தின் மூலம் தான் கற்றுக்கொள்ள முடியும் என்று ஏ.பி.டி வில்லியர்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement