வெறும் 26 ரன்ஸ்.. அசால்ட்டாக டீல் செய்த ஆஸ்திரேலியா.. 27 வருடமாக தொடரும் வெ.இ சோகம்

aus vs wi
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு முதலாவதாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 17ஆம் தேதி அடிலெய்ட் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் தரமான ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக எதிர்பார்த்ததை போலவே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 50, சமர் ஜோசப் 36* ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 4, ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்களை சாய்த்தார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெற்றி:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவும் சற்று தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் சதமடித்து 119, உஸ்மான் கவாஜா 45 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் சமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் சாய்த்து அம்சத்தினார்.

சொல்லப்போனால் 2009க்குப்பின் 15 வருடங்கள் கழித்து வலுவான ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் ஆல் அவுட் செய்த வெஸ்ட் இண்டீஸ் இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான சூழலும் உருவானது. ஆனால் 2வது இன்னிங்ஸில் 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக கிர்க் மெக்ன்சி 26, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 5, மிட்சேல் ஸ்டார்க் 2, நேதன் லயன் 2 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 26 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 9 ரன்னில் காயமடைந்து வெளியேறிய போதிலும் ஸ்டீவ் ஸ்மித் 11*, லபுஸ்ஷேன் 1* ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: விராட் கோலியை பாத்து இளம்வீரர்கள் அந்த விடயத்தை கத்துக்கனும் – இந்திய அணியின் பீல்டிங் கோச் கருத்து

குறிப்பாக கடந்த வருடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற அந்த அணி சமீபத்திய தொடரில் பாகிஸ்தானை 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து வென்றது. அந்த வரிசையில் பலவீனமான வெஸ்ட் இண்டீஸையும் அசால்ட்டாக வீழ்த்திய ஆஸ்திரேலியா 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. மறுபுறம் கடைசியாக 1997இல் வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 27வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்று சோகமான வரலாற்றை மாற்ற தவறியது.

Advertisement