விராட் கோலியை பாத்து இளம்வீரர்கள் அந்த விடயத்தை கத்துக்கனும் – இந்திய அணியின் பீல்டிங் கோச் கருத்து

Fielding
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி இருந்த வேளையில் மூன்றாவது போட்டியிலும் அசத்தலான செயல்பாட்டை வெற்றி வெளிப்படுத்தி தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கடைசி போட்டிக்கு பிறகு இந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் செயல்பாடு குறித்து பேசிய இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளரான திலீப் இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்ட வீரர்களையும் பாராட்டினார்.

- Advertisement -

அதன்படி அவர் கூறுகையில் : மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருமே அசத்தலாக பீல்டிங் செய்தனர். அதேபோல் இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் மேலும் இரண்டு பேர் சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்தி உள்ளனர்.

அதில் ஒருவர் ரிங்கு சிங் மற்றொருவர் விராட் கோலி என்று அறிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போதும் விராட் கோலி மிகச் சிறப்பான பீல்டிங்கை வெளிப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து தற்போதும் மிகச் சிறப்பாக ஃபீல்டிங் செய்து வருகிறார்.

- Advertisement -

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் சிறந்த பீல்டராக இருக்க வேண்டும் என்று சொல்லியதை செய்தும் காண்பித்திருந்தார். அவருடைய வேலையை மட்டும் பார்க்காமல் மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கிறார். அவரை பார்த்து இளம் வீரர்கள் பீல்டிங்கில் எவ்வாறு துடிப்பாக இருக்க வேண்டும் என கற்றுக்கொள்ள வேண்டும் என பீல்டிங் பயிற்சியாளர் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்தார்.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ : அவங்க இந்தியாவுக்கு தேவைன்னு இப்போ புரியுதா? பிராக்யான் ஓஜா கருத்து

அதேபோன்று விராட் கோலியிடம் இருக்கும் எனர்ஜியில் பாதி இருந்தால் கூட மற்றவர்களும் இந்திய அணியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement