2024 டி20 உ.கோ : அவங்க இந்தியாவுக்கு தேவைன்னு இப்போ புரியுதா? பிராக்யான் ஓஜா கருத்து

Pragyan Ojha 3a.jpeg
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நிறைவு பெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் பரபரப்பான அனல் தெறித்த தருணங்களுக்கு மத்தியில் இரட்டை சூப்பர் ஓவர்களில் ஆப்கானிஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்றது ரசிகர்களது மகிழ்ச்சியடைய வைத்தது.

முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடினார்கள். கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த அவர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இம்முறை புதிய இளம் அணியை பிசிசிஐ களமிறக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

அனுபவத்தின் மதிப்பு:
இருப்பினும் அதற்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கடந்த உலக கோப்பையில் காயத்தை சந்தித்து வெளியேறினார். அதன் காரணமாக இந்த தொடரில் தேர்வான ரோகித் சர்மா கடைசி போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார்.

அதே போல இத்தொடரில் பெரிய ரன்கள் எடுக்க தவறினாலும் அதிரடியாக விளையாட முயற்சித்த விராட் கோலி கடைசி போட்டியில் ஃபீல்டிங் துறையில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக இருந்தார். இந்நிலையில் இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் மதிப்பு என்ன என்பது இந்த தொடரில் வெளிப்பட்டதாக முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

எனவே 2024 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் விளையாடுவது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கலர் சினிபிளக்ஸ் சேனலில் பேசியது பின்வருமாறு. “அந்தப் போட்டியில் சூழ்நிலை கடினமாக இருந்தது. ஆரம்பத்தில் எதிரணி சிறப்பாக பந்து வீசியதால் அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து ரோகித் சர்மா செயல்பட்டார். ஆனால் அதன் பின் போட்டியை நகர்த்திய அவர் ஒவ்வொரு அடியிலும் நுணுக்கமாக செயல்பட்டார்”

இதையும் படிங்க: யாருமே அதை பத்தி சொல்லல.. 3வது டி20யில் நிகழ்ந்த குழப்பம் பற்றி.. ஆப்கானிஸ்தான் கோச் பேட்டி

“அது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு எந்தளவுக்கு மதிப்பு மிக்கவர்கள் என்பதை காண்பிக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில் வெற்றி பெறுவதற்கு அவர்கள் தேவை என்பதையும் இப்போட்டி காண்பித்தது. மேலும் இளம் வீரர்களை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கும் அவர்கள் அவசியம் என்பது தெரிந்தது. இதே போட்டியில் ரிங்கு சிங்கும் தன்னுடைய முதிர்ச்சியை காட்டினார். ரோகித் சர்மா எதிர்ப்புறம் இருந்ததால் அவர் போட்டியை நன்றாக புரிந்து விளையாடினார்” என்று கூறினார்.

Advertisement