யாருமே அதை பத்தி சொல்லல.. 3வது டி20யில் நிகழ்ந்த குழப்பம் பற்றி.. ஆப்கானிஸ்தான் கோச் பேட்டி

Jonathan Trott 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடியும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தது. குறிப்பாக ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் கடுமையாக போராடி 20 ஓவர்களில் சரியாக 212 ரன்கள் சேர்த்தது.

அதனால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா எடுத்த 16 ரன்களை மீண்டும் ஆப்கானிஸ்தான் சரியாக எடுத்தது. அதன் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா நிர்ணயித்த 12 ரன்கள் துரத்திய ஆப்கானிஸ்தான் 1 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இந்தியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சரித்திர வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பையும் ஆப்கானிஸ்தான் நழுவ விட்டது.

- Advertisement -

யாருமே சொல்லல:
முன்னதாக அப்போட்டியில் முதல் சூப்பர் ஓவரில் விளையாடிய ரோகித் சர்மா 5வது பந்தில் ரிட்டயராகி சென்றார். குறிப்பாக கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது சற்று மெதுவாக ஓடக்கூடிய தம்மை விட ரிங்கு சிங் இருந்தால் வேகமாக ஓடி ரன்களை எடுப்பார் என்ற எண்ணத்துடன் ரோகித் அந்த முடிவை எடுத்தார்.

இருப்பினும் கடைசி பந்தில் ஜெய்ஸ்வால் 1 ரன் மட்டுமே எடுத்ததால் மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வந்தது சர்ச்சை ஏற்படுத்தியது. அதாவது ஏற்கனவே பேட்டிங் செய்த அவர் எப்படி மீண்டும் 2வது சூப்பர் ஓவரில் விளையாடலாம்? ரிட்டையராகி சென்ற அவர் மீண்டும் எப்படி அனுமதிக்கப்பட்டார் என்பது தற்போது எதிரணி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் 2வது சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா மீண்டும் பேட்டிங் செய்தது சரியா என்ற அடிப்படை விதிமுறையை நடுவர்கள் எங்களிடம் தெளிவாக சொல்லவில்லை என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனதன் டிராட் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. எப்போதாவது இதற்கு முன் 2 சூப்பர் ஓவர்கள் நடந்துள்ளதா? இது புதிதாக அமைந்தது”

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ : சிராஜ், பும்ராவை விட அவர் தான் துருப்புச்சீட்டு பவுலரா இருப்பாரு.. ஜஹீர் கான் தேர்வு

“நாம் எப்போதும் புதிய விதிமுறைகளை அமைத்து வருகிறோம். அதாவது நாம் தொடர்ந்து விதிமுறைகளையும் வழிகாட்டிகளையும் சோதித்து வருகிறோம் என்று நான் சொல்ல வருகிறேன். இந்த போட்டியில் விதிமுறைகள் பற்றி யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. நாங்கள் எங்கள் பவுலர் அஸ்மத் 2வது முறையாக பந்து வீச விரும்பினோம். எனவே இது போன்ற விதிமுறைகள் வருங்காலங்களில் விளக்கப்பட்டு சரியாக எழுதப்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement