2024 டி20 உ.கோ : சிராஜ், பும்ராவை விட அவர் தான் துருப்புச்சீட்டு பவுலரா இருப்பாரு.. ஜஹீர் கான் தேர்வு

Zaheer Khan 3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதில் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. மேலும் அதற்கு தயாராவதற்காக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா கோப்பையை வென்று அசத்தியது.

அந்தத் தொடரில் ஜெயஸ்வால், சிவம் துபே, ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு தங்களுடைய திறமையை காண்பித்ததால் டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இருப்பினும் பவுலிங் துறையில் இந்த தொடரில் முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை என்று சொல்லலாம்.

- Advertisement -

துருப்புச்சீட்டு பவுலர்:
அதனால் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் உலகக் கோப்பையில் விளையாடப் போகும் 3வது வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது இப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அது போன்ற சூழ்நிலையில் மிகவும் அனுபவமிகுந்த முகமது ஷமி இந்தியாவின் துருப்பு சீட்டு பவுலராக செயல்படும் திறமையை கொண்டிருப்பதாக ஜாம்பவான் ஜஹீர் கான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதற்கான காரணத்தைப் பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் கண்டிப்பாக உலகக் கோப்பையில் விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். அவர்களுடன் அர்ஷிதீப் சிங் இருக்கலாம். ஏனெனில் இடது கை பவுலரான அவர் நல்ல வேரியேசன்களை கொண்டுள்ளார். அவர் நல்ல யார்கர் பந்துகளையும் வீசும் திறமையை கொண்டுள்ளது கூடுதல் பலத்தை சேர்க்கும்”

- Advertisement -

“அதே சமயம் காயத்திலிருந்து குணமடைந்து தேர்வுக்கு தயாராக இருந்தால் முகமது ஷமி விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன். 2023 உலகக் கோப்பையில் அவர் அணியின் துருப்புச் சீட்டாக இருந்தார். எனவே இந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களையும் நான் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்வேன்” என்று கூறினார். இருப்பினும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் கடந்த 2 வருடமாக ஷமிக்கு இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ : பாண்டியா – துபேவில் யார் இந்திய அணிக்கு விளையாட வேண்டும்.. ஜஹீர் கான் தேர்வு

ஆனாலும் 2023 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த அவர் அதற்கான ஊதா தொப்பியை வென்று டி20 கிரிக்கெட்டில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அதனால் 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அசத்தும் பட்சத்தில் டி20 உலகக் கோப்பையில் நேரடியாக ஷமி விளையாடுவதற்கு வாய்ப்புகள் உருவாகும் என்றால் மிகையாகாது.

Advertisement