2024 டி20 உ.கோ : பாண்டியா – துபேவில் யார் இந்திய அணிக்கு விளையாட வேண்டும்.. ஜஹீர் கான் தேர்வு

Zaheer Khan 2
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை ஒய்ட் வாஷ் செய்து வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்த இந்தியா புதிய உலக சாதனை படைத்து கோப்பையை வென்றது.

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களுடைய திறமையை காண்பித்தனர். அதில் முதலிரண்டு போட்டிகளில் மொத்தம் 124 ரன்கள் மற்றும் 2 விக்கெட்களை எடுத்த சிவம் துபே ஆல் ரவுண்டராக இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

ஜஹீர் கான் தேர்வு:
கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் கடந்த வருடம் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் தொடர் நாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.

அதனால் அடிக்கடி காயமடைந்து வெளியேறும் பாண்டியாவுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகிய இருவரையுமே தேர்வு செய்யலாம் என்று ஜாம்பவான் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 6வது பவுலர் குறையை போக்குவதற்கு 2 விக்கெட் கீப்பருக்கு பதிலாக 2 ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இது உங்களுக்கு 6வது பவுலர் வேண்டுமா அல்லது 5 பவுலர்கள் போதுமா என்பதை பொறுத்து அமையும். இதில் நீங்கள் எந்த வழியில் செல்கிறீர்களோ அதை பொறுத்து முடிவெடுக்கலாம்”

இதையும் படிங்க: 50/6 என சரித்த இங்கிலாந்து லயன்ஸ்.. 6, 6, 6 ஹாட்ரிக் சிக்சருடன் தனி ஒருவனாக சவாலை கொடுக்கும் படிடார்

“ஒருவேளை உங்களுக்கு 6வது பவுலர் தேவையென்று நினைத்தால் அதற்கான பேக்-அப் அவசியமாகும். அது போன்ற சூழ்நிலையில் 2 விக்கெட் கீப்பர்களுக்கு பதிலாக ஒருவரை மட்டும் தேர்வு செய்தால் உங்களால் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகிய இருவரையும் உலகக் கோப்பையில் தேர்வு செய்ய முடியும்” என்று கூறினார். இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியில் துபே அசத்தும் பட்சத்தில் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement