50/6 என சரித்த இங்கிலாந்து லயன்ஸ்.. 6, 6, 6 ஹாட்ரிக் சிக்சருடன் தனி ஒருவனாக சவாலை கொடுக்கும் படிடார்

Rajat Paditar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரை முன்னிட்டு இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் முதல் பயிற்சி போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டி ஜனவரி 17ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு துவக்க வீரர்கள் கீட்டன் ஜென்னிங்ஸ் அபாரமாக விளையாடி சதமடித்து 154 ரன்கள் விளாசினார். அவருடன் அசத்திய அலெக்ஸ் லீஸ் தம்முடைய பங்கிற்கு அரை சதம் கடந்து 73 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

போராடும் படிதார்:
அதே போல மிடில் ஆர்டரில் கேப்டன் ஜோஸ் போகன்னோன் இந்திய பவுலர்களுக்கு பெரிய சவாலை கொடுத்து சதமடித்து 125 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் டான் மொவுஸ்லி 68, மேத்யூ போட்ஸ் 44*, ஜாக் கார்ஸன் 53* ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து லயன்ஸ் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 553/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

மறுபுறம் கடந்த போட்டியில் அசத்தினாலும் இந்த போட்டியில் தடுமாறிய இந்திய பந்து வீச்சாளர்களில் அதிகபட்சமாக மாணவ் சுதர் 4, வித்வாத் கவேரப்பா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆனால் அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரனை 4 ரன்களில் அவுட்டாக்கிய ஃபிசர் தமிழக வீரர் சாய் சுதர்சனை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அத்துடன் அடுத்து வந்த சர்ப்ராஸ் கானை 4 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய அவர் அடுத்ததாக வந்த மற்றொரு தமிழக பிரதோஷ் பாலையும் டக் அவுட்டாக்கி தெறிக்க விட்டார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த கேஎஸ் பரத் 15, மாணவ் சுதர்சன் 0 ரன்களில் மேத்யூ போட்ஸ் பந்துகளில் ஆட்டமிழந்தனர். அதனால் 50/6 என சரிந்த இந்தியா ஏ 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கியிருந்த மற்றொரு இளம் வீரர் ரஜத் படிதார்அதிரடியாக விளையாடி போராடினார். அவருக்கு எதிர்ப்புறம் கை கொடுக்க முயற்சித்த புல்கிட் நரங் 18, துஷார் தேஷ்பாண்டே 23 ரன்களில் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரஜத் படிதார்83 (91) ரன்களில் இருந்த போது 6, 6, 6 என அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு சதமடித்தார்.

இதையும் படிங்க: விராட் கோலிய குறை சொல்லாதீங்க.. அவரோட எண்ணமே வேற.. விமர்சனங்களுக்கு ரோகித் பதிலடி

அப்போதிலிருந்து தொடர்ந்து அதிரடியை கையிலெடுத்த அவர் எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கி 18 பவுண்டரி 5 சிக்ஸருடன் 140* (132) ரன்கள் குவித்து இந்தியா ஏ அணிக்காக போராடி வருகிறார். அதனால் 2வது நாள் முடிவில் 215/8 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 338 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வருகிறது.

Advertisement