விராட் கோலிய குறை சொல்லாதீங்க.. அவரோட எண்ணமே வேற.. விமர்சனங்களுக்கு ரோகித் பதிலடி

Rohit Sharma 5
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் செய்து வென்றது. குறிப்பாக ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 129*, ரிங்கு சிங் 69* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது.

அதன் பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தானும் ரஹமனுல்லா குர்பாஸ் 50, இப்ராஹிம் ஜாட்ரான் 50, குல்பதின் நைப் 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடைபெற்ற சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.

- Advertisement -

ரோஹித் ஆதரவு:
முன்னதாக இந்த போட்டியில் பெங்களூரு ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்புக்கு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி தன்னுடைய கேரியரிலேயே முதல் முறையாக கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். மேலும் 2வது போட்டியிலும் அதிரடியாக விளையாடி 29 ரன்களில் ஆட்டமிழந்த அவர் இப்போட்டியிலும் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

பொதுவாகவே நிதானமாக துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடக்கூடிய அவர் இந்த தொடரில் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்க நினைத்து அவுட்டானார். எனவே விராட் கோலி புதிதாக முயற்சிக்காமல் வழக்கம் போல விளையாட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இந்நிலையில் விராட் கோலி அணிக்காக அதிரடியாக விளையாடும் எண்ணத்துடன் பேட்டிங் செய்து இத்தொடரில் அவுட்டானதாக கேப்டன் ரோகித் சர்மா ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடுவதற்காக இப்போதே விராட் கோலி அந்த ஸ்டைலில் விளையாட முயற்சிப்பதாக தெரிவிக்கும் ரோஹித் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “அணி வீரர்களின் இடம் மற்றும் அவர்கள் விளையாட விரும்பும் முறை குறித்து நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும். அதனால் களத்திற்கு வரும் போது அணி என்ன எதிர்பார்க்கிறது என்பது எங்களுடைய வீரர்களுக்கு தெரியும்”

இதையும் படிங்க: சமர் ஜோசப் 5 விக்கெட்ஸ்.. 15 வருடங்கள் கழித்து ஆஸியை கட்டுப்படுத்திய போராட்டத்தை வீணடிக்கும் வெ.இ?

“அந்த வகையில் விராட் கோலி இன்று ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாட முயற்சித்ததை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் பொதுவாக அவர் அப்படி விளையாட மாட்டார். இருப்பினும் அவர் அதிரடியாக விளையாடும் எண்ணத்தை காண்பித்தார். சஞ்சு சாம்சனும் அதே போல விளையாட முயற்சித்து முதல் பந்தில் அவுட்டானார்” என்று கூறினார்.

Advertisement