சமர் ஜோசப் 5 விக்கெட்ஸ்.. 15 வருடங்கள் கழித்து ஆஸியை கட்டுப்படுத்திய போராட்டத்தை வீணடிக்கும் வெ.இ?

WI vs AUS 1
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 17ஆம் தேதி அடிலெய்ட் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆனால் அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் எதிர்பார்த்ததை போலவே ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 50, அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர் சமர் ஜோசப் 36 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ்:
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ், ஜோஸ் ஹேசல்வுட் தலா 5 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னருக்கு பதிலாக முதல் முறையாக துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தை தம்முடைய கேரியரின் முதல் பந்திலேயே இளம் வீரர் சமர் ஜோசப் 12 ரன்களில் அவுட்டாக்கினார்.

அத்துடன் கேமரூன் கிரீன் 14, மார்னஸ் லபுஸ்ஷேன் 10 என இதர முக்கிய வீரர்களையும் அவுட்டாக்கிய அவர் முடிந்தளவுக்கு சவாலை கொடுத்தார். ஆனாலும் மிடில் ஆடரில் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து 119 ரன்கள் விளாசி அவுட்டானார். இருப்பினும் அதற்கடுத்ததாக வந்த வீரர்களை குறைந்த ரன்களில் அவுட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை 283 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

- Advertisement -

சொல்லப்போனால் சமீபத்திய வருடங்களில் கத்துக் குட்டியாக மாறிய்யள்ள வெஸ்ட் இண்டீஸ் இதன் வாயிலாக 15 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் ஆல் அவுட் செய்து அசத்தியது. கடைசியாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2009ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் செய்திருந்தது. அதற்கு அதிகபட்சமாக அறிமுக வீரர் சமர் ஜோசப் 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய நிலையில் கிமர் ரோச் மற்றும் ஜஸ்டின் க்ரீவ்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

இதையும் படிங்க: தோற்றாலும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை மோசமான சாதனைக்கு தள்ளிய – ஆப்கானிஸ்தான் அணி

ஆனால் அதைத்தொடர்ந்து 95 ரன்கள் தங்கிய நிலைமையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2வது நாள் முடிவில் 73/6 என திண்டாடி வருகிறது. அந்த அணிக்கு கேப்டன் ப்ரத்வெய்ட் 1, சந்தர்பால் 0, மெக்கன்சி 26, அதனேஷ் 0, காவேம் ஹோட்ஜ் 3, க்ரீவ்ஸ் 24 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். களத்தில் ஜோஸ்வா டா சில்வா 17* ரன்களுடன் உள்ளார். இன்னும் 22 ரன்கள் பின்தங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் இப்போட்டியில் வெற்றியை ஆரம்பத்திலேயே நழுவ விட்டுள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement