தோற்றாலும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை மோசமான சாதனைக்கு தள்ளிய – ஆப்கானிஸ்தான் அணி

IND-vs-AFG
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி எளிதாகவே ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தாலும் மூன்றாவது போட்டியில் அவர்களை வீழ்த்துவதற்கு கடுமையாக போராடியது.

அதிலும் குறிப்பாக இந்த போட்டி இரண்டு சூப்பர் ஓவர் வரை சென்ற பிறகே ஒரு வழியாக இறுதியில் ரவி பிஷ்னாயின் உதவியுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இந்திய அணிக்கு எதிராக அவர்கள் இப்படி ஒரு ஆட்டத்தை விளையாடியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்திய அணி 212 ரன்கள் குவித்தும் அதனை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 212 ரன்கள் குவித்தது.

அதோடு மட்டுமல்லாமல் சூப்பர் ஓவரில் முதலில் விளையாடி 16 ரன்கள் குவித்து அந்த சூப்பர் ஓவரில் சமன் செய்த இந்திய அணியிடம் இரண்டாவது சூப்பர் ஓவர் வரை சென்று தான் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை விட்டுக்கொடுத்து. இப்படி வெற்றிக்காக கடுமையாக போராடியா ஆப்கானிஸ்தாம் அணி இந்திய அணியை ஒரு மோசமான சாதனைக்கும் இந்த போட்டியின் மூலம் தள்ளியிருந்தது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி குறைந்த ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இரண்டாவது நிகழ்வாக இந்த போட்டி மாறியுள்ளது.

இதையும் படிங்க : ரிட்டையர் அவுட்டான ரோஹித் விதிமுறை மீறி பேட்டிங்க்கு வந்தாரா? அம்பயர்கள் தடுக்கத்தாது ஏன்? ரூல்ஸ் சொல்வது என்ன

இதற்கு முன்னதாக கடந்த 2008-ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தான் அணியும் இந்திய அணியை குறைந்த ரன்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த மோசமான சாதனைக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement