ரிட்டையர் அவுட்டான ரோஹித் விதிமுறை மீறி பேட்டிங்க்கு வந்தாரா? அம்பயர்கள் தடுக்கத்தாது ஏன்? ரூல்ஸ் சொல்வது என்ன

Rohit Sharma 5 Super Over
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து 22/4 என தடுமாறியது. ஆனால் அப்போது ரோகித் சர்மா 129*, ரிங்கு சிங் 69* ரன்கள் குவித்து இந்தியா 20 ஓவரில் 212 ரன்கள் எடுக்க உதவினார்கள்.

அதை சேசிங் செய்த ஆப்கானிஸ்தானும் ரஹமனுல்லா குர்பாஸ் 50, இப்ராஹிம் ஜாட்ரான் 50, குல்பதின் 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் சரியாக 212 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. அதற்காக நடத்தப்பட்ட முதல் சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 16 ரன்கள் எடுத்ததது. அதனால் மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் 11 ரன்களை எடுத்த இந்தியா ஆப்கானிஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

- Advertisement -

ரூல்ஸ் என்ன:
அதன் காரணமாக ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்ற இந்தியா டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோற்றதில்லை என்ற கௌரவத்தை தக்கவைத்துக் கொண்டது. முன்னதாக பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதல் சூப்பர் ஓவரில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது ரிட்டையர்ட் அவுட்டாகி சென்றார்.

அதாவது சற்று மெதுவாக ஓடக்கூடிய தம்மை விட ரிங்கு சிங் இருந்தால் வேகமாக ஓடி 2 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைப்பார் என்று கருதிய ரோகித் சர்மா அந்த வித்தியாசமான முடிவை எடுத்தார். இருப்பினும் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜெயஸ்வால் 1 ரன் மட்டுமே எடுத்ததால் முதல் சூப்பர் ஓவர் சமனில் முடிந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட 2வது சூப்பர் ஓவரில் மீண்டும் ரோகித் சர்மா பேட்டிங் செய்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதற்கான விளக்கம் என்னவெனில் “25.4.2 ஐசிசி விதிமுறைப்படி ஒரு பேட்ஸ்மேன் காயம் மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியேறினால் ரிட்டையர்டு நாட் அவுட்டாக கருதப்படும். மேலும் அவர் மீண்டும் விரும்பினால் அந்த இன்னிங்ஸில் விளையாடலாம். அதே சமயம் காயத்தை தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியேறினால் 25.4.2 விதிமுறைப்படி பேட்ஸ்மேன் மீண்டும் விளையாடலாம். ஆனால் அதற்கு எதிரணி கேப்டன் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவிக்க வேண்டும்” என்பது விதிமுறையாகும்.

அந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா 2வது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வந்த போது ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஜாட்ரான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதன் காரணமாக ரோகித் சர்மா விளையாடுவதற்கு களத்தில் இருந்து நடுவர்கள் அனுமதி கொடுத்தனர். அவரும் அதிரடியாக விளையாடி இந்தியா வெற்றி பெற உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement