பார்மில் இல்லாத கே.எல் ராகுலுக்கு பதிலா பார்மில் இருக்கும் அவரை டீமில் சேருங்க – கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar-and-Rahul
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி துவக்க வீரரான கே.எல் ராகுல் ஐபிஎல் தொடருக்கு பின்னர் காயம் காரணமாக அடுத்தடுத்த தொடர்களை தவறவிட்டார். பின்னர் பல மாத இடைவெளிக்கு பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேப்டனாக மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த தொடரிலும் ராகுலின் ஆட்டம் மோசமாக இருந்தது. அதோடு இந்த ஆசியக் கோப்பை தொடரிலும் இடம் பிடித்துள்ள அவர் தற்போது வரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளிலும் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி உள்ளார்.

KL Rahul

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டக் அவுட் ஆகிய அவர் ஹாங்காங் அணிக்கு எதிராக 39 பந்துகளில் 36 ரன்களை மட்டுமே குவித்தார். இதன் காரணமாக தற்போது ராகுலின் இடம் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. ஏனெனில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தற்போது எந்த ஒரு வீரரின் இடமுமே நிலையானது அல்ல என்று அடிப்படையில் தான் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கே.எல் ராகுலுக்கு பகிரங்கமான எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : நீங்கள் பார்மில் இல்லை என்றாலோ அல்லது தொடர்ச்சியாக ரன்குவிக்க தவறினாலோ நிச்சயம் உங்களது இடம் பறிபோகும். இன்னும் உலகக்கோப்பை தொடருக்கு ஒரு மாதமே இடைவெளி உள்ள வேளையில் ராகுல் ஃபார்மில் இல்லாமல் டி20 உலக கோப்பையில் விளையாட முடியாது.

Shuman Gill

என்னை பொருத்தவரை அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை டி20 உலக கோப்பை அணியில் சேர்க்கலாம். ஏனெனில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் சுப்மன் கில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோன்று துவக்க வீரராக அவர் விளையாடி வரும் விதம் நிச்சயம் அவர் ஒரு பெரிய வீரராக மாறுவார் என்பதை உணர்த்துகிறது.

- Advertisement -

டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக பார்ம் அவுட்டில் இருக்கும் கே.எல் ராகுலை தவிர்த்து பார்மில் இருக்கும் சுப்மன் கில்லுடன் செல்வதுதான் நல்லது என கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சுப்மன் கில் மட்டுமின்றி இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற பலர் துவக்க வீரருக்கான போட்டியில் உள்ளனர். எனவே ராகுல் விரைவில் தனது ஆட்டத்தை முன்னேற்றியாக வேண்டும்.

இதையும் படிங்க : SL vs BAN : வாயிலும் களத்திலும் மெகா சண்டை, வம்பிழுத்து அடிவாங்கிய வங்கதேசத்தை கலாய்க்கும் ரசிகர்கள்

இல்லையெனில் யாராவது ஒருவர் அவரது இடத்தை நிரப்பக்கூடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் வாய்ப்பு வரும்போது அதை சரியாக பற்றிக் கொள்ள வேண்டும். இரண்டு மூன்று போட்டிகளுக்குள் மீண்டும் பார்மிற்கு வரவில்லை என்றால் நிச்சயம் அது உங்களது இடத்தை கேள்விக்குறியாக்கி விடும் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement