அவர் மட்டும் டீமுக்கு மறுபடியும் வந்தா உங்க 2 பேர்ல ஒருத்தர் காலி ஆயிடுவீங்க – சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை

Sunil-Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை தவறவிட்ட இந்திய அணியானது அடுத்ததாக அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பை தொடருக்கான அணியை தற்போதிலிருந்தே தயார் செய்து வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரை முடித்த கையோடு வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

IND

- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருப்பதால் இந்த வங்கதேச தொடரில் இருந்தே அனைத்து வீரர்களின் செயல்பாடுகளையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கவனிக்க துவங்கியுள்ளது. இன்னும் ஒரு சில மாதங்கள் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு அமைகிறதோ அதை பொறுத்தே அந்த உலகக்கோப்பை தொடருக்கான அணி தேர்வு இருக்கும் என்பதனால் பிசிசிஐ தற்போதே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது.

இதன் காரணமாக உலகக் கோப்பை அணியில் இடம்பெறப் போகும் வீரர்கள் யார்? யார்? என்பது குறித்த விவாதம் தற்போதே சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரின் இடத்திற்கு ஆபத்து காத்திருக்கிறது என்று ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

Shreyas-iyer

இது குறித்து அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருக்கும் இடையேயான போட்டி இரு வீரர்களுக்குமே பலன் அளிக்கும். ஏனெனில் ஒருவர்தான் உள்ளே செல்வார்கள் என்ற நிலை இருந்தால் இருவருமே இனிவரும் போட்டிகளில் நன்றாக ரன்குவிப்பார்கள் என்று நினைக்கிறேன். எனவே இது இரண்டு வீரர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி தான்.

- Advertisement -

ஷ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே சிறந்த பீல்டர்கள். அவர்களால் பீல்டிங்கில் ரன்களை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். ஐந்தாவது, ஆறாவது இடத்திற்கு அவர்களுக்கு இடையான போட்டி ஆரோக்கியமானது தான் ஆனாலும் ஒரு விடயத்தை நாம் மறந்து விடக்கூடாது. முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா விரைவில் ஒருநாள் போட்டிகளிலும் அணியில் விளையாட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வங்கதேச வீரரின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் வித்தியாசமான முறையில் கொண்டாடிய – முகமது சிராஜ்

அவர் ஓய்வுக்கு பிறகு மீண்டும் வந்து ஒருநாள் அணியில் இடம் பிடித்தால் நிச்சயம் ராகுல் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவரின் இடம் காலியாகிவிடும் என்பதை மறக்கக்கூடாது என கவாஸ்கர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement