வங்கதேச வீரரின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் வித்தியாசமான முறையில் கொண்டாடிய – முகமது சிராஜ்

Mohammed-Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது டிசம்பர் 7-ஆம் தேதி இன்று டாக்கா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்ததால் தற்போது வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் வங்கதேச அணியின் வீரர்கள் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்தனர்.

Mohammed Siraj 1

- Advertisement -

குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரர்களான அனமுல் ஹக் 11 ரன்களும், லிட்டன் தாஸ் 7 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். மேலும் அனுபவ கிரிக்கெட் வீரர்களான சாகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், ஷாண்டோ ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் பங்களாதேஷ் அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனாலும் அதன் பின்னர் தற்போது மெஹதி ஹாசன் மற்றும் முகமதுல்லா ஆகியோர் ஐம்பது ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாசை போல்ட் மூலம் ஆட்டம் இழக்க வைத்த முகமது சிராஜ் அவரது விக்கெட்டை கொண்டாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohammed Siraj Ronaldo

அந்த வகையில் போட்டியின் பத்தாவது ஓவரில் மிகச் சிறப்பான பந்தினை லிட்டன் தாசுக்கு எதிராக வீசிய சிராஜ் அவரை கிளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார். உடனே தனது மார்பின் மீது கை வைத்து அவரது விக்கெட்டை அமைதியாக கொண்டாடினார். இப்படி வித்தியாசமாக சிராஜ் விக்கெட்டினை கொண்டாடுவது புதிது அல்ல.

- Advertisement -

பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோவின் தீவிர ரசிகரான சிராஜ் ஏற்கனவே ரொனால்டோ கால்பந்தாட்ட களத்தில் எவ்வாறு தனது கோலை கொண்டாடுகிறாரோ அந்த வகையிலேயே சிராஜ் தனது விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க : வீடியோ : ரத்த சொட்ட சொட்ட இரண்டாவது ஓவரிலேயே களத்திலிருந்து வெளியேறிய ரோஹித் – என்ன நடந்தது?

அந்த வகையில் அண்மையில் ரொனால்டோ ப்பீஸ்(Peace) செலிப்ரேஷன் என்று கூறப்படும் இந்த வகையான கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் தற்போது சிராஜும் அதே ஸ்டைலை பின்பற்றி லிட்டன் தாசின் விக்கெட்டை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement