ரத்த சொட்ட சொட்ட இரண்டாவது ஓவரிலேயே களத்திலிருந்து வெளியேறிய ரோஹித் – என்ன நடந்தது?

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய வங்கதேச அணியானது இன்று நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

ஏற்கனவே இந்த தொடரில் ஒரு வெற்றியுடன் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் வங்கதேச அணியானது இன்று துவங்கிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி தற்போது வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற முனைப்புடன் வங்கதேச அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணியும் விளையாடி வருவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி துவங்கிய இரண்டாவது ஓவரிலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரத்தம் சொட்ட சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி இந்த போட்டியின் இரண்டாவது ஓவரில் சிராஜ் பந்தில் அனமுல் ஹக் அடித்த பந்து இரண்டாவது ஸ்லிப்பை நோக்கி சென்றது. அப்போது ஸ்லிப் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் பந்தை கேட்ச் பிடிக்க நினைத்து கட்டை விரலில் காயமடைந்து கொண்டார்.

- Advertisement -

முதலில் சாதாரண காயம் தான் என்று பார்க்கப்பட்ட வேளையில் பந்து பட்ட சில வினாடிகளிலேயே துடிக்க ஆரம்பித்த ரோகித் பின்னர் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு ரத்தமும் வடிந்தது. இதனால் அவசர அவசரமாக மைதானத்தில் இருந்து வெளியேறிய ரோகித் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs BAN :இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை செய்த ரோஹித் – பிளேயிங் லெவன் இதோ

எனவே அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது பேட்டிங்கிற்கு வருவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ரஜத் படித்தார் ஃபீல்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement