IND vs BAN :இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை செய்த ரோஹித் – பிளேயிங் லெவன் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வங்கதேச நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த நான்காம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Bangladesh

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது அதே டாக்கா மைதானத்தில் இன்று துவங்கி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் சற்று முன்னர் நடைபெற்ற டாஸ்க்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அதன்படி முதலாவது ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறாமல் இருந்த அக்சர் பட்டேல் தற்போது சபாஷ் அகமதுக்கு பதில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அதேபோன்று முதலாவது ஒருநாள் போட்டியில் அறிமுக வாய்ப்பினை பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான குல்தீப் சென் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்படுவதாக தெரிவித்தார்.

Umran Malik

இப்படி ஒரே போட்டியில் இரண்டு மாற்றங்களை ரோகித் சர்மா செய்திருந்தாலும் மீண்டும் மிடில் ஆடரில் எந்த ஒரு புது வீரருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. கடந்த போட்டியை போன்று கே.எல் ராகுல் விக்கெட் கீப்ராகவும் தொடர்கிறார். இதன் காரணமாக இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தொடரை சமன் செய்யும் இல்லையெனில் இந்த போட்டியின் முடிவிலேயே வங்கதேச அணி இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : விராட் கோலியை தான் அவங்க பாலோ பண்றாங்க, இந்தியா தப்பு பண்ணிட்டாங்க – முன்னாள் இங்கி வீரர் ஓபன்டாக்

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவான், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) வாஷிங்க்டன் சுந்தர், 7) அக்சர் படேல், 8) ஷர்துல் தாகூர், 9) தீபக் சாகர், 10) முகமது சிராஜ், 11) உம்ரான் மாலிக்.

Advertisement