200 ரன்ஸ் அடிச்சாலும் அதை மனசுல வெச்சு ஆடுங்க.. ப்ராட்மேன் சொன்ன அறிவுரையை சர்ப்ராஸ்க்கு வழங்கிய கவாஸ்கர்

Sunil gavaskar 55
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் தரம்சாலா நகரில் 5வது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 4, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, தேவ்தூத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்தனர். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 473/8 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்று இப்போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

- Advertisement -

கவாஸ்கரின் அறிவுரை:
களத்தில் குல்தீப் யாதவ் 27*, பும்ரா 19* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இந்த தொடரில் அறிமுகமான சரபராஸ் கான் முதல் போட்டியிலேயே 62, 67 ரன்கள் அடித்து தன்னுடைய கேரியரை சிறப்பாக துவங்கினார். இருப்பினும் அந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு அவர் இந்த போட்டியில் மீண்டும் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (60) ரன்கள் குவித்து நல்ல செட்டிலானர்.

அதனால் அறிமுகப் போட்டியில் தவறவிட்ட சதத்தை இப்போட்டியில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தேனீர் இடைவேளை முடிந்ததும் எதிர்கொண்ட முதல் பந்திலேயே லேட் கட் ஷாட்டை அடித்து விக்கெட்டை பரிசளித்தார். இந்நிலையில் இப்போட்டியில் தேனீர் இடைவெளி முடிந்த முதல் பந்தில் சர்பராஸ் தவறான நேரத்தில் சுமாரான சாட்டை அடித்து அவுட்டானதாக சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அது போன்ற சமயங்களில் 200 ரன்களில் இருந்தாலும் 0 ரன்களில் இருப்பதாக நினைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று ஒருமுறை ஜாம்பவான் டான் ப்ராட்மேன் தமக்கு ஆலோசனை வழங்கியதாகவும் கவாஸ்கர் கூறியுள்ளார். அதைத் தற்போது சர்பராஸ் கானுக்கு வழங்கியுள்ள அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அந்த பந்து பிட்ச் செய்யப்பட்டது. எனவே அது அந்த ஷாட்டை அடிப்பதற்கு தேவையான அளவு ஷார்ட்டாக இல்லை”

இதையும் படிங்க: புஜாரா கிடையாது.. இதெல்லாம் இவனுக்கு தேவையா.. சதமடித்தும் சுப்மன் கில்லை சாடிய அப்பா.. காரணம் என்ன

“இருப்பினும் அதை அடிப்பதற்காக சென்ற சர்பராஸ் கான் அதற்கான விலையை கொடுத்தார். அதாவது தேநீர் இடைவெளியின் முதல் பந்தை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள். இது போன்ற நேரத்தில் உங்களுக்கு நீங்களே கொஞ்சம் பார்வையைக் கொடுக்க வேண்டும். டான் ப்ராட்மேன் என்னிடம் “நான் 200 ரன்களில் இருந்தாலும் 0 ரன்களில் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வேன்” என்று கூறியுள்ளார். ஆனால் இங்கே சர்பராஸ் காம் செசனின் முதல் பந்தில் அப்படி ஒரு ஷாட்டை அடித்துள்ளார்” என்று கூறினார்.

Advertisement