புஜாரா கிடையாது.. இதெல்லாம் இவனுக்கு தேவையா.. சதமடித்தும் சுப்மன் கில்லை சாடிய அப்பா.. காரணம் என்ன

Shubman Gill Father
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இளம் இந்திய வீரர் சுப்மன் கில் முதல் போட்டியில் தடுமாற்றமாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதனால் அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனத்தை சந்தித்த அவர் 2வது போட்டியில் 104 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி கம்பேக் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து ராஜ்கோட் நகரில் 91 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெறுவதற்கு உதவிய அவர் ராஞ்சியில் நடந்த 4வது போட்டியில் 52* ரன்கள் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். மேலும் தரம்சாலாவில் நடைபெற்று வரும் 5வது போட்டியிலும் சதமடித்து 110 ரன்கள் குவித்துள்ள அவர் இந்த தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தனது தரத்தை நிரூபித்து தம்பித்துள்ளார்.

- Advertisement -

இதெல்லாம் தேவையா:
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் துவக்க வீரராக களமிறங்கி நன்றாக விளையாடிய சுப்மன் கில் 3வது இடத்தில் களமிறங்கியதிலிருந்தே தடுமாற்றமாக விளையாடினார். ஆனால் புஜாராவுக்கு பின் 3வது இடத்தில் விளையாடுவதற்கு விரும்பி கேட்டதால் தாங்கள் அதை கில்லுக்கு கொடுத்து வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் துவக்க வீரராக விளையாடிய தன்னுடைய மகன் சுப்மன் கில் தற்போது புஜாரா போல 3வது இடத்தில் விளையாடுவது சரியான முடிவு அல்ல என்று அவரின் தந்தை லக்விந்தர் சிங் கூறியுள்ளார். இருப்பினும் அவருடைய முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவிக்கும் லக்விந்தர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இறங்கி சென்று அடிப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அவர் அதை நிறுத்தி விட்டதாலேயே அழுத்தத்தை சந்தித்தார். அண்டர்-16 அளவிலேயே அவர் இறங்கி சென்று ஸ்பின்னர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களையும் எதிர்கொள்வார்”

- Advertisement -

“அப்படி உங்களுடைய இயற்கையான ஆட்டத்தை கைவிடும் போது நீங்கள் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். இந்த விளையாட்டே தன்னம்பிக்கையை பொறுத்தது. அதில் ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினால் மீண்டும் நீங்கள் சிறந்த இடத்திற்கு வந்து விடலாம். அவர் துவக்க வீரராக தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும். 3வது இடத்தில் விளையாடுவது சரி என்று நான் கருதவில்லை. ஏனெனில் நீங்கள் உடைமாற்றும் அறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கும் போது அழுத்தமும் பதற்றமும் அதிகரிக்கும். 3 என்பது ஓப்பனிங்கும் கிடையாது மிடில் ஆர்டர் இடமும் கிடையாது”

இதையும் படிங்க: ரவீந்திர ஜடேஜாவிற்கு முன்னதாகவே சர்பராஸ் கானை அனுப்பி மாஸ் காட்டிய ரோஹித் சர்மா – சூப்பர் கேப்டன்சி

“மேலும் கில்லின் ஆட்டம் அது போன்றது கிடையாது. அது தடுப்பாட்டம் விளையாடக்கூடிய புஜாராவுக்கு தான் பொருந்தும். இருப்பினும் அவருடைய இந்த முடிவில் நான் தலையிட விரும்பவில்லை. அவருக்கு பயிற்சி மட்டுமே கொடுக்கிறேன். அவர் தன்னுடைய சொந்த முடிவை எடுக்கும் அளவுக்கு போதுமான வயதைக் கொண்டுள்ளார். அவர் டீன் ஏஜராக இருந்த போது மட்டுமே நான் முடிவுகளை எடுத்து வந்தேன்” என்று கூறினார்.

Advertisement