ரவீந்திர ஜடேஜாவிற்கு முன்னதாகவே சர்பராஸ் கானை அனுப்பி மாஸ் காட்டிய ரோஹித் சர்மா – சூப்பர் கேப்டன்சி

Jadeja-and-Sarfaraz
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தரம்சாலா நகரில் நடைபெற்று வருகிறது. மார்ச் 7-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் குவித்து 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ளதால் நிச்சயம் இந்திய அணியே இந்த போட்டியிலும் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் வழக்கமாக ஐந்தாவது இடத்தில் களமிறங்கி வந்த ரவீந்திர ஜடேஜாவிற்கு முன்னதாகவே சர்ஃபராஸ் கான் ஐந்தாவது வீரராக களம் இறக்கப்பட்டது அனைவரதிகு மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

ஏனெனில் இந்த தொடரில் இதுவரை ஐந்தாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா விளையாடி வந்த வேளையில் கடைசி போட்டியில் சர்பராஸ் கான் முன்கூட்டியே அனுப்பப்பட்டார். அதற்கு காரணம் யாதெனில் : இதற்கு முன்னதாக நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் நான்காவது வீரராக வலது கை ஆட்டக்காரர் ரஜத் பட்டிதார் இடம் பெற்றிருந்தார்.

- Advertisement -

அதன் காரணமாகவே ரோகித் சர்மா வலதுகை வீரருக்கு பின்னால் இடதுகை வீரரான ரவீந்திர ஜடேஜாவை முன்கூட்டியே களத்திற்கு அனுப்பினார். ஆனால் இன்றைய போட்டியில் 4-ஆவது இடத்தில் தேவ்தத் படிக்கல் அறிமுகமாகி பேட்டிங் செய்ததால் வலது கை வீரர் வேண்டும் என்பதன் காரணமாக சர்பராஸ் கான் முன்கூட்டியே அனுப்பப்பட்டார்.

இதையும் படிங்க : ஒருநாள் முன்னாடி மெசேஜ் பண்ணாங்க.. டிராவிட் சார் கொடுத்த அட்வைஸ் ஹெல்ப் பண்ணுச்சு.. படிக்கல் பேட்டி

இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப ரோகித் சர்மா எடுத்த இந்த முடிவு அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு இன்றைய போட்டியில் சர்பராஸ் கான் மற்றும் படிக்கல் ஆகியோரது ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவித்து அசத்தியது. படிக்கல் 65 ரன்களையும், சர்பராஸ் கான் 56 ரன்களையும் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement