ஒருநாள் முன்னாடி மெசேஜ் பண்ணாங்க.. டிராவிட் சார் கொடுத்த அட்வைஸ் ஹெல்ப் பண்ணுச்சு.. படிக்கல் பேட்டி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 473/8 ரன்கள் எடுத்துள்ளது. மார்க் ஏழாம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 57, ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, சர்பராஸ் கான் 56, தேவ்தூத் படிக்கல் 65 ரன்கள் எடுத்தனர். அதன் பின் ஜடேஜா 15, துருவ் ஜுரேல் 15, அஸ்வின் 0 ரன்களில் அவுட்டானாலும் குல்தீப் யாதவ் 27*, பும்ரா 19* ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து வருகின்றனர். அதனால் 2வது நாள் முடிவில் இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

அறிமுக வாய்ப்பு:
இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய தேவ்தூத் படிக்கல் 65 ரன்கள் அடித்து கேரியரை நன்றாகவே துவங்கியுள்ளார். கடந்த வாரம் ரஞ்சிக் கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்த தமக்கு இப்போட்டியில் விளையாடும் அரிதான வாய்ப்பு ஒருநாள் முன்பாக கிடைத்ததாக தெரிவிக்கும் அவர் ராகுல் டிராவிட் கொடுத்த அறிவுரை முதல் 15 நிமிடங்களில் ஏற்பட்ட பதற்றத்தை சரி செய்து விளையாட உதவியதாக கூறியுள்ளார்.

இது பற்றி இரண்டாவது நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக அறிமுகமாக விளையாடுவதற்கு தயாராக இருக்க விரும்பினேன். அந்த வாய்ப்புக்கான மெசேஜ் ஒருநாள் முன்பாக மட்டுமே கிடைத்தது. இந்த வாய்ப்புகள் வருவது மிகவும் அரிது. இதற்காக நான் தயாராக இருந்தேன். களத்திற்குள் சென்றதும் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் ஆற்றலை நேர்மறையாக பயன்படுத்த விரும்பினேன்”

- Advertisement -

“குறிப்பாக தலையை கீழே வைத்து சர்பராஸுடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தேன். அறிமுகத் தொப்பியை பெற்ற நிமிடங்கள் மிகவும் ஸ்பெஷலானது. ஆரம்பத்தில் சற்று பேட்டிங் செய்வதற்கு பதற்றமாக இருந்தது. ஆனால் பந்தின் மீது கண்ணை வைத்ததும் அனைத்தும் எளிதானது. ரிவர்ஸ் ஸ்விங் இருந்த சமயத்தில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொள்ளுவது சவாலாக இருந்தது”

இதையும் படிங்க: வாழ்க்கையில் இதான் முதல் முறை.. அப்பாவை பெருமையடைய வெச்சுட்டேன்னு நம்புறேன்.. சுப்மன் கில் பேட்டி

“அறிமுகப் போட்டியில் ஏற்கனவே பழக்கமான முகங்களை கொண்டிருப்பது எப்போதும் அருமையாக இருக்கும். குறிப்பாக ராகுல் டிராவிட் சார் முதல் 10 – 15 நிமிடங்களில் உங்களுக்கு பதற்றமாக இருக்கும். ஆனால் அதிலிருந்து வெளியே வந்து மகிழ்ச்சியாக விளையாடுங்கள் என்று சொன்னார். அந்த வார்த்தைகள் நிச்சயமாக எனக்கு உதவியது. நாங்கள் இன்னும் சற்று சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம் என்று நினைத்தேன். எங்களிடம் 3 தரமான ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். எனவே நாளைய போட்டியில் கண்டிப்பாக அவர்களுடைய தாக்கம் அதிகமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement