வாழ்க்கையில் இதான் முதல் முறை.. அப்பாவை பெருமையடைய வெச்சுட்டேன்னு நம்புறேன்.. சுப்மன் கில் பேட்டி

Shubman Gill 5
- Advertisement -

தரம்சாலாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2வது நாள் முடிவில் இந்தியா 473/8 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது. மார்ச் 7ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து சுமாராக விளையாடி 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, தேவ்தூத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 என டாப் 5 பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவித்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஜடேஜா 15, ஜுரேல் 15, அஸ்வின் 0 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

அப்பாவுக்கு பெருமை:
இருப்பினும் அடுத்து வந்த குல்தீப் யாதவ் 27*, பும்ரா 19* ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து வருகின்றனர். அதனால் இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்தை விட 225 ரன்கள் குவித்துள்ள இந்தியா இந்த போட்டியில் வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய சுப்மன் கில் 2வது போட்டியிலிருந்து நல்ல ரன்கள் குவித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அந்த வரிசையில் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி சதமடித்த போது மைதானத்தில் இருந்த அவருடைய அப்பா மிகுந்த பெருமையுடன் எழுந்து நின்று கைதட்டி கில்லை பாராட்டினார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இன்று தான் தன்னுடைய ஆட்டத்தை அப்பா லல்விந்தர் சிங் நேரில் பார்த்ததாக சுப்மன் கில் கூறியுள்ளார். எனவே இன்றைய நாளில் சதமடித்து அவருடைய கனவை நிஜமாக்கியிருப்பேன் என்று நம்புவதாக தெரிவிக்கும் கில் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சர்வதேச கிரிக்கெட்டில் நான் விளையாடும் போட்டியை இன்று தான் அவர் முதல் முறையாக நேரில் பார்க்கிறார். நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது அவருடைய கனவாகும். இன்று அவரை நான் பெருமையடைய வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். ஆண்டர்சனுக்கு எதிரான பந்து பெரிய அளவில் நகராததால் அதன் மேலே சென்று அடித்து அவர் மீது அழுத்தத்தை போட விரும்பினேன்”

இதையும் படிங்க: 500 ரன்ஸ் அடிக்காம போக மாட்டோம்.. இங்கிலாந்திடம் அடம் பிடிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்.. 15 வருடங்கள் கழித்து சாதனை

“ஒவ்வொரு முறையும் நான் பேட்டிங் செய்ய செல்லும் போது நன்றாக உணர்கிறேன். இருப்பினும் இன்று அவுட்டான பந்தை நான் சரியாக பார்க்கவில்லை. ஆனால் களத்திற்கு ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய செல்லும் போது நன்றாக உணர்வதால் இது போன்ற துவக்கத்தை நான் பெரிதாக மாற்றுவேன் என்று நம்புகிறேன். ஆண்டர்சனுக்கு எதிராக சிக்சர் அடித்த பின் நாங்கள் சில வார்த்தைகள் பேசினோம். அது எங்களுக்குள்ளேயே இருப்பது நல்லது” என்று கூறினார்.

Advertisement