500 ரன்ஸ் அடிக்காம போக மாட்டோம்.. இங்கிலாந்திடம் அடம் பிடிக்கும் இந்திய பேட்ஸ்மேன்கள்.. 15 வருடங்கள் கழித்து சாதனை

IND vs ENG 5
- Advertisement -

தரம்சாலாவில் மார்ச் ஏழாம் தேதி இந்தியாவுக்கு எதிராக துவங்கிய 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு துவக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆரம்பத்திலேயே சிறப்பாக விளையாடி 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதில் இந்த தொடரில் ஆரம்பம் முதலே இங்கிலாந்தை சொல்லி அடித்து வரும் ஜெய்ஸ்வால் மீண்டும் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 57 (58) ரன்கள் குவித்து அவுட்டானார். அதைத்தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு முன்னிலையை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

அசத்திய டாப் 5:
அதில் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 103 ரன்களும் சுப்மன் கில் தனது பங்கிற்கு சதம் விளாசி 110 ரன்களும் எடுத்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் கிளீன் போல்ட்டானார்கள். அவர்களைத் தொடர்ந்து இளம் வீரர்கள் தேவ்தூத் படிக்கள் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் ஜோடி சேர்ந்து தங்களுடைய பங்கிற்கு 4வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள்.

அதில் சர்பராஸ் கான் 56 ரன்களும் அறிமுக போட்டியில் அசத்திய தேவ்தூத் படிக்கல் 65 ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அந்த வகையில் ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, கில் 110, படிக்கல் 65, சர்ப்ராஸ் கான் 56 என இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50க்கும் மேற்பட்ட ரன்களை போட்டியில் குவித்தனர். இதன் வாயிலாக 15 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.

- Advertisement -

இதற்கு முன் கடைசியாக 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் முரளி விஜய், சேவாக், டிராவிட், சச்சின் மற்றும் லக்ஷ்மன் ஆகிய டாப் 5 பேட்ஸ்மேன்கள் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்திருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 15, ஜுரேல் 15, அஸ்வின் 0 ரன்களில் அவுட்டானதால் விரைவில் இந்தியா ஆல் அவுட்டாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்தியா 376/3 ரன்ஸ்.. மார்க் வுட்’டுக்கு எதிராக அசால்ட்டான அப்பர் கட்.. 8 போர்ஸ் 1 சிக்ஸருடன் அசத்தும் சர்பராஸ் கான்

ஆனால் அப்போது வந்த குல்தீப் யாதவ் – பும்ரா ஆகியோர் மீண்டும் ஜோடி சேர்ந்து இந்தியாவை 500 ரன்கள் தாண்ட வைக்க வைக்காமல் அவுட்டாக மாட்டோம் என்ற வகையில் பேட்டிங் செய்தனர். அதனால் 2வது நாள் முடிவில் 473/8 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்று இபபோட்டியில் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. களத்தில் குல்தீப் 27*, பும்ரா 19* ரன்களுடன் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பசீர் 4* விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Advertisement