- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 2ம் என்னோட அம்மா, அப்பா.. பிசிசிஐ அலுவலகத்தில் கிடைத்த மெகா கெளரவம்.. கவாஸ்கர் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கருக்கு பிசிசிஐ தலைமை செயலகத்தில் ஸ்பெஷல் கௌரவம் கொடுக்கப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 1974இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். தம்முடைய அறிமுக டெஸ்ட் தொடரிலேயே வெறித்தனமான வேகத்தில் பவுலிங் செய்யக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்களை கவாஸ்கர் ஹெல்மெட் இல்லாமலேயே எதிர்கொண்டார்.

அந்தத் தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றியது இன்றளவும் சாதனையாக இருந்து வருகிறது. அந்த வகையில் 70களில் இந்திய பேட்டிங் துறையின் முன்னணி வீரராக செயல்பட்ட கவாஸ்கர் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வெற்றிகளில் பங்காற்றினார். அதே போல 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியிலும் அங்கமாக இருந்த அவர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

- Advertisement -

ஸ்பெஷல் கெளரவம்:

1985ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உலக சாம்பியன்ஷிப் கோப்பை நடைபெற்றது. அந்தத் தொடரில் கேப்டனாக செயல்பட்ட கவாஸ்கர் தலைமையில் இந்தியா இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்றது. அந்தக் கோப்பையை வென்றதும் தொடர்நாயகன் ரவி சாஸ்திரி வாங்கிய ஆடி காரில் இந்திய அணியினர் வலம் வந்ததை மறக்க முடியாது.

இவை அனைத்தையும் விட 1987ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை தொட்ட முதல் வீரர் என்ற மாபெரும் மைல்கல் உலக சாதனையை கவாஸ்கர் உலக சாதனை படைத்தார். ஓய்வுக்குப் பின் பல வருடங்களாக வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் இந்திய கிரிக்கெட்டில் புகழ்பெற்றவராக வலம் வருகிறார். இந்நிலையில் உலகிலேயே 10000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்த கவாஸ்கர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

- Advertisement -

கவாஸ்கர் நெகிழ்ச்சி:

எனவே மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட்டின் தலைமை அலுவலகத்தின் முதன்மை அறைக்கு “10000 கவாஸ்கர்” என்ற பெயரை சூட்டியுள்ள பிசிசிஐ அவருக்கு கௌரவம் செய்துள்ளது. அந்த அறையைத் திறந்து வைத்த கவாஸ்கர் தரையைத் தொட்டு கும்பிட்டுக்கொண்டார். பின்னர் அந்த அறைக்குள் இருக்கும் 1983 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை போன்ற இந்தியாவின் வெற்றிக் கோப்பைகளை பார்வையிட்ட அவர் தன்னுடைய பெயரைக் கொண்ட ஜெர்சி மற்றும் புகைப்படங்களில் ஆட்டோகிராப் போட்டார்.

இதையும் படிங்க: இங்கேயும் பாகிஸ்தானுக்கு சோகம்.. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கான பரிசை அறிவித்த ஐசிசி

மேலும் 1985இல் தாம் கேப்டனாக வென்ற உலக சாம்பியன்ஷிப் கோப்பையை தூக்கிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மும்பை வாரியம் என்னுடைய அம்மா. பிசிசிஐ என்னுடைய அப்பா. மிகவும் நன்றி. இந்திய கிரிக்கெட்டுக்கு நன்றி. இது மிகப்பெரிய கௌரவம். பிசிசிஐக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். இந்த வயதிலும் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதை செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறினார். அந்த நிகழ்வில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

- Advertisement -