இங்கேயும் பாகிஸ்தானுக்கு சோகம்.. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவுக்கான பரிசை அறிவித்த ஐசிசி

WTC 2025
- Advertisement -

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்கும் நோக்கத்தில் துவக்கப்பட்ட இத்தொடரில் விராட் கோலி தலைமையில் சொல்லி அடித்த இந்தியா ஃபைனலுக்கு சென்றது. ஆனால் 2021ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா மீண்டும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அதைத் தொடர்ந்து மீண்டும் ரோஹித் சர்மா தலைமையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வெற்றி நடை போட்டு வந்தது.

- Advertisement -

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

ஆனால் கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் தோற்ற இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. மறுபுறம் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா 2வது அணியாக 67.54% புள்ளிகளுடன் ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அதற்கு முன்பாகவே தென்னாபிரிக்கா புள்ளிகளுடன் முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் மாபெரும் இறுதிப்போட்டி வரும் ஜூன் 11 – 15 ஆகிய தேதிகளில் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகை பட்டியலை ஐசிசி தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்கு எவ்வளவு:

அதன் படி ஃபைனலில் வெற்றி பெறும் அணிக்கு 3.6 அமெரிக்க டாலர்கள் அதாவது 30.78 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இறுதிப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் அணி 2.1 மில்லியன் டாலர்கள் 18.46 கோடிகள் பரிசாக பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த தொடரை விட 125%, 162.50% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

3வது இடத்தை பிடித்த இந்தியா 12.31 கோடி ரூபாய்கள் ஆறுதல் பரிசு தொகையாக பெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடங்களைப் பிடித்த நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 10.26, 8.20, 7.18, 6.15, 5.13 கோடிகளை பரிசாக பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சதமடித்தும் தோற்ற போது.. கிங் கோலி சொன்ன வார்த்தை தான் 2018இல் ஆஸியில் ஜெய்க்க காரணம்.. பரத் அருண்

அந்தத் தொடரில் மிகவும் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் வெறும் 27.98% புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. அதனால் அந்த அணிக்கு இருப்பதிலேயே மிகவும் குறைவாக 4.10 கோடி மட்டுமே பரிசாக கிடைக்க உள்ளது. அந்த வகையில் இங்கேயும் பாகிஸ்தான் சோகத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement