வீடியோ : நான் கண் மூடுறதுக்கு முன்னாடி – தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது ஏன்? ஜாம்பவான் கவாஸ்கர் உருக்கமான பதில்

- Advertisement -

பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2018 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்து டெல்லிக்கு எதிரான கடைசிப் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் உள்ளது. அதை விட இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனி இந்த சீசனுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான கேப்டனாக திகழும் அவர் தற்போது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விளையாடுவதால் அதை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். குறிப்பாக தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்கள் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தமாக திரண்டு வந்து அவர் களமிறங்கும் போதெல்லாம் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு ஆரவாரம் செய்து ஆதரவு கொடுக்கிறார்கள்.

- Advertisement -

ஜாம்பவானின் ஆட்டோகிராப்:
அப்படி தங்களுக்கு எல்லையற்ற அன்பும் ஆதரவு கொடுக்கும் தமிழக ரசிகர்களுக்கு கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற இந்த சீசனின் கடைசி லீக் போட்டியின் முடிவில் தோனி தலைமையிலான சென்னை அணியினர் நன்றி தெரிவித்து கையொப்பமிட்ட பந்துகள் போன்ற உபகரணங்களை பரிசாக கொடுத்தனர். ஆனால் அப்போது அப்போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ரசிகனை போல் ஓடிவந்து தம்முடைய நெஞ்சில் ஆட்டோகிராப் போடுமாறு தோனியுடன் கேட்டார்.

அதற்கு “நீங்க போய் என்னிடம் ஆட்டோகிராப் கேட்கலாமா” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்த தோனி அவரை கட்டிப்பிடித்து நெஞ்சின் மேல் இருந்த சட்டையில் கையொப்பமிட்டார். உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற சாதனை மைல்கல்லை தொட்ட முதல் வீரராகவும் சச்சின் உட்பட பல ஜாம்பவான்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் கவாஸ்கர் அப்படி தம்மை விட ஜூனியராக இருக்கும் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்காக ஏராளமான பங்காற்றியுள்ள தோனி சென்னை ரசிகர்களுக்கு பரிசுகளை வழங்கிய போது தாமும் ஆட்டோகிராப் வாங்க நினைத்ததாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதை விட தாம் உலகை விட்டு இயற்கை எய்துவதற்கு முன்பாக 1983இல் கபில் தேவ் உலகக் கோப்பையை வென்ற தருணத்தையும் 2011 உலக கோப்பையை வென்ற ஃபைனலில் தோனி சிக்ஸர் அடித்த தருணத்தையும் பார்த்துக் கொண்டே செல்ல விரும்புவதாக கலங்கிய கண்களுடன் அவர் கூறியது அருகில் இருந்த ஹர்பஜன் சிங், யூசுப் பதான் நெஞ்சை தொட்டது.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் என்று அறிந்ததுமே அந்த தருணத்தில் நானும் ஏதாவது ஸ்பெஷல் நினைவை உருவாக்க முடிவெடுத்தேன். அதனால் தான் எம்எஸ் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக நான் ஓடினேன். அது சேப்பாக்கத்தில் அவர் விளையாடிய கடைசி சொந்த மண் போட்டியாகும். இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் அவர்கள் மீண்டும் சேப்பாக்கத்தில் விளையாடுவார்கள் என்பதை நான் அறிவேன்”

- Advertisement -

“ஆனாலும் அந்த தருணத்தில் நான் ஸ்பெஷல் நினைவை ஏற்படுத்த விரும்பினேன். அந்த சமயத்தில் கேமரா குழுவினர் எனக்கு பேனா கொடுத்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதனால் அந்த நபருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போது மஹியிடம் சென்று நான் அணிந்திருந்த சட்டையில் ஆட்டோகிராப் போட சொன்னேன். அதை அவர் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அந்த தருணம் எனக்கு உணர்ச்சிகரமாகவும் இருந்தது”

இதையும் படிங்க:IPL 2023 : ஒருவேளை டெல்லியிடமும் தோற்றால் குவாலிபயர் 1 – ப்ளே ஆஃப்க்கு சிஎஸ்கே செல்ல முடியுமா? கல்குலேட்டார் முடிவுகள் இதோ

“ஏனெனில் அந்த மனிதர் இந்திய கிரிக்கெட்டுக்காக மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். கபில் தேவ் 1983 உலக கோப்பையை தூக்குவது மற்றும் 2011 உலகக் கோப்பை வென்ற ஃபைனலில் எம்எஸ் தோனி அடித்த அந்த சிக்சர் ஆகியன நான் கண் மூடுவதற்கு முன்பாக பார்க்க விரும்பும் 2 தருணங்களாகும்” என்று கூறினார்.

Advertisement