IPL 2023 : ஒருவேளை டெல்லியிடமும் தோற்றால் குவாலிபயர் 1 – ப்ளே ஆஃப்க்கு சிஎஸ்கே செல்ல முடியுமா? கல்குலேட்டார் முடிவுகள் இதோ

CSK vs DC WIn
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் 10 அணிகள் விளையாடுவதால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு முன்பை விட மும்மடங்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது. சொல்லப்போனால் இதுவரை நடைபெற்ற 62 போட்டிகளின் முடிவில் குஜராத் மட்டுமே அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ள நிலையில் எஞ்சிய 3 இடத்திற்கு 6 அணிகள் போட்டி போடுகின்றன. மறுபுறம் முதல் 12 போட்டிகளில் 8 தோல்விகளை பதிவு செய்த டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் முதல் 2 அணிகளாக லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன.

IPL-2023

- Advertisement -

மறுபுறம் 3 இடத்திற்கு போட்டி போடும் 6 அணிகளில் தலா 13 போட்டிகளில் 7 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முறையே 6,7 இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இதர அணிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால் கடைசி போட்டியில் வென்றால் கூட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு வெறும் 10% மட்டுமே வாய்ப்புள்ளது. அதிலும் குறைவான ரன்ரேட்டை கொண்டுள்ள கொல்கத்தாவுக்கு 6% மட்டுமே வாய்ப்புள்ளது.

சென்னையின் வாய்ப்பு:
அத்துடன் 12 போட்டிகளில் தலா 6 வெற்றிகளை பதிவு செய்துள்ள பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் வென்றாலும் பிளே ஆஃப் செல்ல குறைவான வாய்ப்புகளே இருக்கிறது. குறிப்பாக கூடுதல் ரன்ரேட்டை பெற்ற காரணத்தால் கடைசி 2 போட்டியில் வென்றால் பெங்களூருவுக்கு 31% வாய்ப்பும் பஞ்சாப்புக்கு 21% வாய்ப்பும் உள்ளது. அதே போல் 13 புள்ளிகளுடன் தற்போது 4வது இடத்தில் இருக்கும் லக்னோ எஞ்சிய 2இல் வென்றால் 61% வாய்ப்பும் 3வது இடத்தில் 14 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் 80% வாய்ப்பையும் கொண்டுள்ளன.

CSK 2023

இந்நிலையில் எம்எஸ் தோனி தலைமையில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. அதனால் டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றால் சென்னை 90% பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் கொல்கத்தாவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில் தோற்றதால் குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு சென்னைக்கு 31% மட்டுமே உள்ளது.

- Advertisement -

1. குவாலிபயர் 1 போட்டியின் நன்மை என்னவெனில் அதில் தோற்றால் மீண்டும் எலிமினேட்டர் போட்டியில் விளையாடி வென்றால் ஃபைனல் செல்வதற்கான எக்ஸ்ட்ரா வாய்ப்பு கிடைக்கும் என்பதை ரசிகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. எனவே 31% வாய்ப்பு மட்டுமே இருக்கும் குவாலிபயர் 1 போட்டிக்கு சென்னை தகுதி பெற்று குஜராத்துடன் மோத வேண்டுமெனில் இன்று நடைபெறும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் மும்பை தோற்க வேண்டும். அத்துடன் கொல்கத்தாவுக்கு எதிராக தன்னுடைய கடைசி போட்டியில் லக்னோ தோற்க வேண்டும். மேலும் சென்னை தனது கடைசிப்போட்டியில் டெல்லியை தோற்கடிக்க வேண்டும்.

CSK vs DC

2. இருப்பினும் அது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஏதோ ஒரு இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை நிச்சயம் வென்றாக வேண்டும். ஒருவேளை தோற்றால் பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தங்களுடைய கடைசி 2 போட்டியில் குறைந்தது ஒன்றில் தோல்வியை பதிவு செய்தால் மட்டுமே சென்னைக்கு 3 அல்லது 4வது அணியாக தேர்வாகும் வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க:GT vs SRH : நீ பவுலிங் போட்ட சிக்ஸ் அடிப்பேன்னு அவர்கிட்ட சொல்லிட்டு தான் அடிச்சேன் – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

3. அதே சூழலில் மற்றொரு வாய்ப்பாக மும்பை தன்னுடைய கடைசி 2 போட்டிகளில் தோற்க வேண்டும். அத்துடன் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் லக்னோ தோல்வியை சந்திப்பதுடன் சென்னையை விட குறைவான ரன்ரேட்டை கொண்டிருக்க வேண்டும். அதுபோக பெங்களூரு மற்றும் ஆகிய அணிகள் தங்களுடைய கடைசி 2 போட்டிகளில் குறைந்தது ஒன்றில் தோற்க வேண்டும். இது நடைபெற்றாலும் டெல்லிக்கு எதிராக சென்னை தோல்வியை சந்தித்தாலும் கூட 3 அல்லது 4வது அணியாக சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

Advertisement