GT vs SRH : நீ பவுலிங் போட்ட சிக்ஸ் அடிப்பேன்னு அவர்கிட்ட சொல்லிட்டு தான் அடிச்சேன் – ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

Shubman-Gill
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62-வது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

Gill

- Advertisement -

குஜராத் அணி சார்பாக துவக்க வீர சுப்மன் கில் 58 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 101 ரன்கள் அடித்தார். பின்னர் 189 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Gill 1

இந்நிலையில் போட்டி முடிந்து தான் விளையாடிய விதம் குறித்து பேசிய சுப்மன் கில் கூறுகையில் : நான் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவே அறிமுகமாகினேன். தற்போது அந்த அணிக்கு எதிராகவே எனது முதல் சதத்தை அடித்துள்ளது மகிழ்ச்சி. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இந்த சதத்தின் மூலம் எனக்கு தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இனியும் சில சதங்கள் என்னிடம் இருந்து வரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த சதமானது முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. அந்த வகையில் எனக்கு இந்த சதத்தை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : எங்கள நல்லா யூஸ் பண்ணி ஏமாத்திடீங்க – நாடு திரும்பும் நட்சத்திர வீரர் மீது சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்

அதேபோன்று அபிஷேக் சர்மா ஓவரில் அடித்த சிக்சர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் இந்த போட்டிக்கு முன்னதாகவே நான் அவரிடம் “நீ பந்து வீசினால் நிச்சயம் நான் உன்னுடைய ஓவரில் சிக்சர் அடிப்பேன்” என்று கூறியிருந்தேன். அதன்படி அவரது ஓவரில் சிக்ஸ் அடித்தது மகிழ்ச்சி என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement