IPL 2023 : எங்கள நல்லா யூஸ் பண்ணி ஏமாத்திடீங்க – நாடு திரும்பும் நட்சத்திர வீரர் மீது சிஎஸ்கே ரசிகர்கள் கோபம்

- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடி 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. தற்போது நிலைமையில் டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சென்னை நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சீசனில் இங்கிலாந்தைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸை 16.50 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை வாங்கியது.

பொதுவாகவே குறைந்த தொகைக்கு தரமான வீரர்களை வாங்கும் அணியாக கருதப்படும் சென்னை வரலாற்றிலேயே வெளிநாட்டு வீரருக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் ஒர்த் ப்ரோ என சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் அளவுக்கு உலகின் நம்பர் ஒன் வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருக்கும் அவர் கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார். அதனால் ஓய்வு பெற்ற ஜாம்பவான் ட்வயன் ப்ராவோவுக்கு மாற்று வீரராகவும் விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனிக்கு பதிலாக கேப்டனாக கூட அவரை பயன்படுத்தலாம் என்று சென்னை ரசிகர்கள் கனவு கண்டு கணக்கும் போட்டனர்.

- Advertisement -

வெளியேறும் ஸ்டோக்ஸ்:
ஆனால் ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் என்று ஆரம்பத்திலேயே வெளிப்படையாக அறிவித்த அவர் சென்னை ரசிகர்களின் மகிழ்ச்சியை பாதி சிதைத்தார். அதை விட கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் காயத்தை சந்தித்த அவர் இந்த சீசனில் முதலிரண்டு போட்டியில் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி முறையே 7, 8 என மொத்தம் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். அதே போல் முதல் போட்டியில் பெயருக்காக ஒரு ஓவர் வீசிய அவர் 18 ரன்களை வாரி வழங்கினார்.

அதை தொடர்ந்து காயத்துக்காக சிகிச்சை பெற்றுக்கொண்டு தொடர்ந்து பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியும் களமிறங்காததால் “இவர் விளையாடவே வேண்டாம் பேசாமல் நாட்டுக்கு அனுப்புங்கள்” என்று சென்னை ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ஏற்கனவே சொன்னது போல் ஜூன் 1இல் துவங்கும் அயர்லாந்து டெஸ்ட் மற்றும் ஜூன் 16இல் துவங்கும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் டெல்லிக்கு எதிராக சென்னை பங்கேற்கும் கடைசி லீக் சுற்றுப் போட்டியுடன் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக 4வது வேகப்பந்து வீச்சாளராக செயல்படும் நோக்கத்தில் அவர் முன்கூட்டியே இங்கிலாந்து பயணித்து தேவையான பயிற்சிகளை எடுக்க உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதனால் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் இல்லை என்றாலும் அதில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார் என்பது தெரிய வருகிறது. அதன் காரணமாக ஏமாற்றமடைந்துள்ள சென்னை ரசிகர்கள் டெல்லி போட்டி வரை ஏன் தாமதம்? இப்போதே இங்கிலாந்துக்கு செல்லுங்கள் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

ஏனெனில் 16.5 கோடி என்ற தோனியை விட அதிகமான சம்பளத்தை பெற்ற அவர் இந்த தொடரில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியில் துளியளவும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதை விட தனது நாட்டுக்கு விளையாடுவதற்காக சென்னை அணியில் இருந்து கொண்டு 16.50 கோடிகளை சம்பாதித்த அவர் அணி நிர்வாகம் சார்பாக இலவச சிகிச்சையையும் எடுத்து விட்டு தற்போது குணமடையும் நேரத்தில் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளார்.

இதையும் படிங்க:SRH vs GT : பவர் பிளேவிற்குள் இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும் – எய்டன் மார்க்ரம் வருத்தம்

மறுபுறம் சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு இன்னும் சந்தேகமாகவே இருக்கும் நிலையில் அதைப் பற்றி கவலைப்படாத அவர் தன்னுடைய நாட்டுக்கு விளையாடும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வெளியேற உள்ளார். மொத்தத்தில் எங்களுடைய சென்னை அணியின் வெற்றிகளை பற்றி கவலைப்படாமல் எங்களை நன்றாக பயன்படுத்திக் கொண்ட நீங்கள் ஆஷஸ் தொடரிலாவது முழுமையாக விளையாடுங்கள் அடுத்த வருடம் வேறு அணியில் விளையாடுங்கள் என்று அந்த அணி ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement