SRH vs GT : பவர் பிளேவிற்குள் இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும் – எய்டன் மார்க்ரம் வருத்தம்

Markram
- Advertisement -

அகமதாபாத் நாரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையேயான 62-ஆவது ஐபிஎல் லீக் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 34 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி தங்களது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

Mohit Sharma

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.

பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

Gill

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் பாதிவரை வெற்றிக்கான வாய்ப்பில் இருந்ததாகவே நினைக்கிறேன். ஆனால் துவக்கத்திலேயே பவர் பிளேவிற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் அதன் பிறகு வந்த ஓவர்கள் மிகவும் சவாலானாதாக மாறியது.

- Advertisement -

எனவே பேட்டிங்கில் நாங்கள் தடுமாற்றத்தை சந்தித்தோம். அதே போன்று எங்களிடம் நல்ல தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தும் சுப்மன் கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடி அசத்தினார். இருந்தாலும் எங்கள் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தார். கிளாஸன் எவ்வளவு பெரிய வீரர் என்பதை மீண்டும் மீண்டும் வெளிக்காட்டி வருகிறார்.

இதையும் படிங்க : வீடியோ : இவ்ளோ சுயநலமாவா ஆடுவீங்க, இளம் குஜராத் வீரரால் பாண்டியாவிடம் கொந்தளித்த நெஹ்ரா – நடந்தது என்ன

இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் சில முக்கிய பாடங்களை கற்றுள்ளோம். இனிவரும் போட்டிகளில் எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் வெற்றி பெற்று இந்த தொடரை நல்லபடியாக முடிக்க நினைக்கிறோம் என மார்க்ரம் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement